2 வருஷம் கழிச்சு என்ட்ரி.. "அன்னைக்கி தோனி பேசும் போதே கலங்கி போய்ட்டாரு".. முதல் முறையாக மனம்திறந்த ஷேன் வாட்சன்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது ஐபிஎல் போட்டியை தான் எதிர்பார்த்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.

Advertising
>
Advertising

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அட, இப்படியும் ஒரு Maternity ஷூட்டா?".. மொத்த குடும்பத்தையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வந்த வாலிபர்.. மனதை நெகிழ வைக்கும் பின்னணி!!

இதன் அறிமுக போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அகமதாபாத் மைதானத்தில் வைத்து மோதுகின்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை புதிதாக அறிமுகமாகி இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதே வேளையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒன்பதாவது இடம்பிடித்து வெளியேறியிருந்தது.

இந்த முறை நிச்சயம் சிஎஸ்கே அணி பழைய ஃபார்மிற்கு திரும்பி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது. இத்தனை நாட்களாக தோனி அன்ட் கோ -வை ஹோம் மைதானத்தில் பார்க்காத ரசிகர்கள் இந்த முறை பார்க்க முடியும் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி உள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தோனி குறித்தும், சிஎஸ்கே அணி குறித்தும் தற்போது தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத சிஎஸ்கே அணி, 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடி இருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வந்த சிஎஸ்கே, 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி பட்டையைக் கிளப்பி இருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இந்த தொடரின் போது நடந்த சம்பவம் குறித்து தற்போது பேசிய ஷேன் வாட்சன், "அந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அணியின் நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசிய ஒரு விஷயம் இருக்கிறது. அவர் பேசியதை நீங்கள் பார்த்தால் அது அவருக்கு எவ்வளவு அர்த்தம் உள்ளது என்று புரியும். சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்ததை எண்ணி அவர் எமோஷனல் ஆகவும் பேசி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இதன் பின்னர் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் ப்ராவோ உதவியுடன் வெற்றி பெற்றோம். உடனடியாக எங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது. நாங்கள் நல்ல வீரர்களை பெற்றிருந்தோம். நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அணிக்குள் ஒரு நல்ல சூழல் என்பது தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன்  பிளெம்மிங் உருவாக்கியது தான். நாங்கள் எப்போதுமே ஜாலியாக இருப்போம். ஒன்றாக அமரும் போது கூட போட்டியின் முடிவை பற்றி பேசியது கிடையாது. சென்னை அணிக்காக விளையாடியது சிறப்பான நேரமாக இருந்தது" என நெகிழ்ச்சியுடன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

Also Read | "2024 ஐபிஎல் -லயும் தோனி ஆடுவாரா?".. பிரபல கிரிக்கெட் வீரர் கருத்தால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

CRICKET, MS DHONI, SHANE WATSON, IPL, IPL 2018

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்