'காயத்துடன் கால்களை இழுத்தப்படி செல்லும் வாட்சன்'... 'உருகும் ரசிகர்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடிபட்ட காலுடன் தரையில் கால்களை இழுத்தப்படியே, ஷேன் வாட்சன் நடந்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் வாட்சன் சிறப்பாக விளையாடி, சென்னையை இறுதி கட்டம் வரை அழைத்து சென்றார்.

அதிரடியாக விளையாடிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அவர், கிட்டத்தட்ட ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை களத்தில் நின்றார். ரன் அவுட் முறையில் வாட்சன் ஆட்டமிழந்ததால் போட்டியின் போக்கே மாறியது எனலாம். அந்தப் போட்டியின்போது வாட்சன் காலில் அடிபட்டதை யாருமே கவனிக்கவில்லை.

இதுகுறித்து வாட்சனின் புகைப்படம் ஒன்றை சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யவே,  ரசிகர்களுக்கு தெரியவந்தது. அதன்பின் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாட்சனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர். அதன்பின்னர், அடிபட்ட காலுடன் 12 ஓவர்கள் வரை வாட்சன் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் அவரது காலில் 6 தையல்கள் போடப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது இறுதிப்போட்டி முடிந்தப் பின்னர் ஷேன் வாட்சன் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றபோது, அடிப்பட்ட  காலை மெதுவாக தரையில் இழுத்தப்படியே செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து ஐ.பி.எல். ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து கூறி வருகின்றனர்.

IPL2019, SHANEWATSON, VIRALVIDEO, WATTO, CSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்