"இந்த '4' டீம் தான்... பிளே ஆஃப் 'qualify' ஆவாங்க..." அடித்துக் கூறும் முன்னாள் 'வீரர்'... இது மட்டும் நடந்தா நல்லா 'இருக்கும்'ல!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும், தற்போதைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகருமான ஷேன் வார்னே, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.

இதில் ராஜஸ்தான் அணி, முதல் இரண்டு போட்டிகளில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதல் தோல்வியை தழுவியது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி, இளம் வீரர்கள் மற்றும் அனுபவமிக்க வீரர்களை கலந்த அணியாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பலமிக்க அணியாக டெல்லி விளங்குகிறது.

ஐபிஎல் தொடரில் டாப் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இருந்தாலும், வழக்கம் போல கடைசி நடக்கும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கடும் தடுமாற்றம் கண்டுள்ள நிலையில், சென்னை அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றில் முன்னேறாமல் வெளியேறுமா என ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனாலும், அடுத்து வரும் போட்டிகளில் கேப்டன் தோனி சிறப்பான அணியை களத்தில் இறக்கி பழைய பார்முக்கு சிஎஸ்கே அணி திரும்ப வரும் எனவும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூட்டம் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது புள்ளிப்பட்டியலில் சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கின்றது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்