"ஏலத்துல என்னை மும்பை அணி எடுத்த 2 நிமிஷத்துல அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு".. சூரிய குமார் பற்றி மனம் திறந்த இளம் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்த ஷாம்ஸ் முலானி, சூரிய குமார் யாதவ் உடனான தனது அனுபவம் பற்றி மனம் திறந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | 102 குழந்தைகள்.. 12 மனைவிகளுக்கும் கணவன் போட்ட ஆர்டர்.. கடைசியா அரசாங்கம் வரை விஷயம் போய்டுச்சு.. யாரு சாமி இவரு..!

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் போட்டி போட்டுக்கொண்டு வீரர்களை எடுத்தது.

இந்நிலையில், மும்பை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷாம்ஸ் முலானி எனும் இளம் வீரர் இந்த அனுபவம் பற்றி பேசியிருக்கிறார். முலானி மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூரிய குமார் யாதவ் உடன் இணைந்து முதல் தர கிரிக்கெட்டில் மும்பைக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில், ஏலத்தில் தான் எடுக்கப்பட்டது குறித்து பேசியிருக்கிறார் முலானி.

அப்போது,"ஐபில் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி என்னை எடுத்த 2 வது நிமிடத்தில் சூரிய குமார் யாதவ் எனக்கு போன் செய்தார். எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மும்பைக்கு நான் அறிமுகமானதிலிருந்து அவர் அணியில் இருந்தபடியே எனது பயணத்தைப் பார்த்து வருகிறார். அவர் எனக்கு ஒரு மூத்த சகோதரர் போன்றவர். எப்போதும் என்னை வழிநடத்துபவர் அவர். என்னை இரவு உணவுக்கு அவர் அழைப்பது உண்டு. அப்போதும் கிரிக்கெட் பற்றி நிறைய பேசுவார். எப்போதும் எனக்கு பெரும் ஆதரவாக இருப்பவர் அவர்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சுழற்பந்து வீச்சாளரான முலானி மும்பையை சேர்ந்தவர். ஆகவே, மும்பை அணிக்காக சொந்த ஊரில் விளையாடுவது தனக்கு கூடுதல் பலமாக இருக்கும் எனவும் இந்த தருணத்துக்காக தான் வெகுநாட்கள் காத்திருந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

Also Read | மறைந்த ஷேன் வார்னே-வுக்காக திரண்ட ரசிகர்கள்.. மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. நெட்டிசன்களை கலங்க வச்ச வீடியோ..!

CRICKET, SHAMS MULANI, SURYAKUMAR YADAV, IPL MINI AUCTION 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்