'தோனி சொன்னதை அப்படியே செய்தேன்'... 'அதனாலதான் அந்த மாயஜாலம் நிகழ்ந்தது'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, தோனியின் ஆலோசனைதான் முக்கிய காரணமாக இருந்தது என ஷமி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் கடந்த சனிக்கிழமையன்று நடைப்பெற்றது. இதில் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆடத்  தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி நான்கு ஓவர்களை பும்ரா மற்றும் முகமது ஷமி சிறப்பாக வீச இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 1987-ம் ஆண்டில், நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்தியாவின் மித வேகப் பந்துவீச்சாளர் சேட்டன் சர்மா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அதன்பின் 32 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை வரலாற்றில் முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதுகுறித்து ஷமி கூறுகையில் ‘2 விக்கெட் வீழ்த்திய பின்னர் தோனி எனக்கு அருகில் வந்தார். தோனி என்னிடம், உங்களுடைய திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

ஹாட்ரிக் சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதானது என்றார். அவர் கூறுவது எப்போதும் சரியாக நடக்கும். சரியாக வீசிக் கொண்டு இருக்கிறாய் நீ.. மீண்டும் அதே யார்கர் பந்தை வீசு. நீ கண்டிப்பாக ஹாட்ரிக் விக்கெட் விழும் என்று எனக்கு கூறிவிட்டுப் போனார் தோனி. நானும் அப்படியே யார்கர் வீசினேன். அது ஹாட்ரிக் விக்கெட் ஆக விழுந்தது' என்று முகமது ஷமி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்