"'மேக்ஸ்வெல்' இல்ல... 'ஸ்டீவ் ஸ்மித்தும்' இல்ல... இவரு தான் நாளைக்கு 'மாஸ்' பண்ண போறாரு..." தனி டிராக்கில் கணித்த 'நெஹ்ரா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டு ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான ஏலம் நாளை 3 மணியளவில் சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது.

இதற்காக, எட்டு ஐபிஎல் அணிகளும், பல வீரர்களை தக்க வைத்துக் கொண்டு சிலரை விடுவிக்கவும் செய்துள்ளது. ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 292 வீரர்கள் மட்டுமே ஏலத்திற்கு தேர்வாகினர். அதிரடி வீரர் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், தென்னாப்பிரிக்க வீரர் க்றிஸ் மோரிஸ் ஆகிய வீரர்கள் நாளை நடைபெறவுள்ள ஏலத்தில் அதிக விலைக்கு போவார்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவை அனைத்திற்கும் நேர்மாறான கருத்து ஒன்றை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். 'நாளை நடைபெற போகும் ஐபிஎல் ஏலத்தில் நிறைய பெரிய பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இந்த முறை அதிக விலைக்கு போகும் வீரராக வங்காளதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தான் இருப்பார். அவர் எந்த அணிக்காக ஆடினாலும் மிகப் பொருத்தமாக இருப்பார்' என கூறியுள்ளார்.

ஐசிசியின் ஓராண்டு தடை காரணமாக, கடந்த ஐபிஎல் சீசனில் ஷகிப் அல் ஹசன் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்