'ஷகிப்' அல் ஹசனுக்கு வந்த கொலை 'மிரட்டல்'... உடனடியாக அவரே வெளியிட்ட 'வீடியோ'... 'அதிர்ச்சி' சம்பவம்!!!... நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு வங்கதேசம் மட்டுமல்லாது இந்தியா உட்பட பல நாடுகளில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் நேரலையில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த குறிப்பிட்ட நபர் மட்டுமில்லாது வங்கதேசத்தை சேர்ந்த பலர் ஷகிப் அல் ஹசனை எதிர்த்தனர். 

இதற்கு காரணம், சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற காளி பூஜை ஒன்றில் ஷகிப் அல் ஹசன் கலந்து கொண்டதாகவும், அந்த பூஜையை அவரே தொடங்கி வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது தான். இதன் காரணமாக, காளியை ஷகிப் அல் ஹசன் வழிபட்டு விட்டு வந்ததால் இஸ்லாமிய மக்களின் உணர்வை அவர் புண்படுத்தி விட்டார் எனக்கூறி அந்த நபர் நேரலையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். பின்னர், அந்த நபர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த சம்பவம் அதிக பரபரப்பை கிளப்பிய நிலையில், ஷகிப் அல் ஹசன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் காளி பூஜையை தொடங்கி வைக்கச் செல்லவில்லை என்றும், பூஜை ஆரம்பிக்கப்பட்டு பல மணி நேரம் கழித்துத் தான் நான் அங்கு சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்