இந்தியாவை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்.. 48 -வது ஓவருக்கு முதல் விக்கெட் அசத்திய வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்கார்களான ஜான் கேம்பல் மற்றும் ஷாய் ஹோப் ஆகிய இருவரும் ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜான் கேம்பல் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி முதல் விக்கெட் இழப்புக்கு 365 ரன்களை எடுத்து உலக சாதனை படைத்தது.

இதில் ஜான் கேம்பல் 137 பந்துகளில் 179 ரன்களும்(15 பவுண்ட்ரி, 6 சிக்ஸர்), ஷாய் ஹோப் 152 பந்துகளில் 170 ரன்களும்(22 பவுண்ட்ரி, 2 சிக்ஸர்) எடுத்து அசத்தினர். இதற்கு முன்னர் இந்திய மகளிர் அணியின் பூனம் ரவூட் மற்றும் தீப்தி ஷர்மா ஜோடி முதல் விக்கெட் 320 ரன்களை அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் எடுத்து சாதனை படைத்திருந்தனர். மேலும் சச்சின் மற்றும் டிராவிட் கூட்டணி ஒருநாள் போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 34.4 ஓவர்களின் முடிவில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ICC, WIVIRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்