‘இதுக்கு ஒரு எண்டே கிடையாதா..?’.. ‘இந்த மாதிரி தப்பை ஏத்துக்கவே முடியாது’.. தமிழக வீரரை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிராவோவை தொடர்ந்து தமிழக வீரர் ஷாருக் கானை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 14-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மயன்ங் அகர்வால் 22 ரன்களும், ஷாருக் கான் 22 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 18.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 63 ரன்களும், கேப்டன் டேவிட் வார்னர் 37 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடும் தமிழக வீரரான ஷாருக் கானை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு காரணம், அப்போட்டியின் கடைசி ஓவரில் பந்துவீச்சாளர் பந்துவீசி முடிப்பதற்குள் ஷாருக் கான் க்ரீஸை தாண்டிச் சென்றிருந்தார். அப்படி சென்றால் ஐசிசி விதிகளில்படி ‘மான்கட்’ முறையில் அவுட் செய்யலாம்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரை தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் மான்கட் முறையில் அவுட் செய்தார். அது அப்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுபோன்று பந்துவீசி முடிப்பதற்குள் க்ரீஸை தாண்டிச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே (Harsha Bhogle) தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செயலை கண்டிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் பிராவோவும் இதுபோல் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்