அஃப்ரிடி வீசிய முதல் ஓவர்... மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேட்ஸ்மேன் ... பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தில் ஆப்கானிஸ்தானின் துவக்க ஆட்டக்காரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் காயமடைந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

இந்த வருடத்துக்கான T20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. இதற்காக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகின்றன. அதே வேளையில், இந்த உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மற்றொருபக்கம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடின.

பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி. அதன்படி ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்க்ஸை துவங்கியது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக முகமது நபி 51 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி சேஸிங்கை துவங்கியது. அந்த அணி 2.2 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. வெகுநேரமாகியும் மழை விடாததால் போட்டி கைவிடப்பட்டது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன்ஷா அஃப்ரிடி முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை ரஹ்மானுல்லா குர்பாஸ் எதிர்கொண்டார். யார்க்கராக வீசப்பட்ட அந்த பந்து குர்பாஸ்-ன் காலில் பட்டது. அப்போது நடுவர் எல்பிடபிள்யூ என அவருக்கு அவுட் கொடுத்தார். ஆனால் காலில் பந்து பட்டதால் வலியால் துடித்த குர்பாஸ் அங்கேயே அமர்ந்துவிட்டார். இதனையடுத்து அந்த அணியின் மருத்துவர்கள் உள்ளே சென்று அவரை பரிசோதித்தனர். அதன்பிறகு வீரர் ஒருவர், குர்பாசை தோளில் தூக்கிக்கொண்டு வெளியே சென்றார்.

இதனையடுத்து மருத்துவனைக்கு குர்பாஸ் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கே அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

 

T20 WORLDCUP, PAKISTAN, AFGHANISTAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்