VIDEO: முந்தின பால் 'சிக்ஸர்' அடிச்சார்னு கடுப்புல இப்படியா ஒரு 'பவுலர்' நடந்துப்பாரு...? 'காயமடைந்த பேட்ஸ்மேன்...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் வீரர் ஷகீன் ஷா அப்ரிடி வங்காளதேச அணி பேட்ஸ்மேனின் காலில் வேண்டுமென்றே பந்தை எறிந்த குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் மூன்று டி-20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் வங்காளம் மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதோடு, நேற்று முன்தினம் (20-11-2021) டாக்காவில் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணி பந்து வீசும் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி, வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன் அபிப் ஹூசைன் மீது வேண்டுமென்றே பந்தை எறிந்துள்ளார்.

இதனால், அபிப் ஹூசைன் அவர்களது காலில் காயமும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதே ஓவரில் முந்தைய பந்தில் அபிப் சிக்சர் அடித்ததன் காரணமாக அப்ரிடி தன் கோவத்தை பந்தில் காட்டி ஹூசைன் மீது வேகமாக அடித்து சிக்கியுள்ளார்.

 

SHAHEEN SHAH AFRIDI, BALL, FEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்