தோனியின் ஆசையில் மண் அள்ளி போட்ட IPL அணி... CSK வளர்த்த பையனை கொத்தாக தூக்கிட்டாங்க! சோகத்தில் சென்னை ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலம், தற்போது பெங்களூரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

பல வீரர்களும், எதிர்பார்க்காத அணியில் ஏலம் போக, தங்களின் விருப்பப்பட்ட வீரர்கள், எந்த அணியில் இடம்பெறுவார்கள் என்பது பற்றியும், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.   இன்று தொடங்கிய மெகா ஏலத்தின் முதல் குரூப்பில்10 வீரர்கள் எடுக்கப்பட்டனர். அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது குரூப்பில், ஏலம் நடத்தியவர் திடீரென மயங்கி விழ,சிறிது நேரத்திற்கு ஐபிஎல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

ஷ்ரேயாஸ் ஐயர் 12.25 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். தீபக் ஹூடா 5.75 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஹர்ஷல் பட்டேல் பெங்களூர் அணியால் 10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.ஜேசன் ஹோல்டரை லக்னோ அணி 8.75 கோடி ஏலம் எடுத்தது.

நிதிஷ் ராணா கொல்கத்தா அணியால் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.  பிராவோ மீண்டும் 4.40 கோடிக்கு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். தேவ்தத் படிக்கலை 7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஜேசன் ராயை 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

தமிழக வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 கோடிக்கும், வாஷிங்டன் சுந்தர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 8.75 கோடிக்கும்,
தினேஷ் கார்த்திக் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 5.50 கோடிக்கும், டி நடராஜன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 4 கோடிக்கும் ஏலம் போனர்.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாருக் கான் - பஞ்சாப் - ரூ 9 கோடிக்கு ஏலம் போனார். கடந்த சில வருடங்களாகவே ஷாருக்கான் மிகப்பெரிய அளவில் ரன்களை குவித்தும் ,தான் சார்ந்த அணியை கடைசி பந்தில் கூட வெற்றி பெற வைத்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். 200க்கும் மேல் ஸ்டைரைக் ரேட் உடைய மிடில் ஆர்டர் வீரராகவும் ஷாருக்கான் திகழ்கிறார். 

இந்நிலையில் ஷாருக்கானை இந்த ஏலத்தில் எடுக்க சென்னை அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது. சென்னை அணியில் தோனியின் பார்ம் மோசமாக உள்ளது, மேலும் தோனிக்கு வயதாவதால் தோனிக்கு மாற்றாக ஒரு பினிசர் தேவைப்படுவதாலும் ஷாருக்கானை எடுக்க CSK முழு மூச்சில் ஈடுபட்டது. 

கடைசியில் அடிப்படை விலையான ரூ. 40 லட்சத்தில் இருந்து 9  கோடிக்கு ஷாருக்கானை பஞ்சாப் அணி வாங்கி உள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் இந்திய கேப் அணியாத கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது அதிகபட்ச விலையாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தற்போதைய தொடரில் தனது முதல் போட்டியை ஆட உள்ளார் ஷாருக்கான். 

இவர் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

IPL, CSK, KINGS-XI-PUNJAB, BCCI, CRICKET, IPL AUCTION, SHAH RUKH KHAN, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்