"இந்த பொண்ணுக்கு பயம்னா என்னன்னே தெரியல..." "அடிச்சா சிக்ஸ்... தொட்டா பவுண்டரி..." 'அதிரடி' பேட்டிங்கில் 'பட்டையை' கிளப்பும் 'இளம் புயல்'... இந்திய அணியின் பவர் 'ரன்மெஷின்'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய மகளிர் கிரிகெட் டீமில் இளம் புயலாக உருவெடுத்துள்ள அதிரடி வீராங்கனை தான் இந்த ஷஃபாலி வெர்மா. களத்தில் பயமே கிடையாது, கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி பவுண்டரி விளாசி பந்து வீச்சாளரின் நம்பிக்கையைக் குலைப்பது இவரது ஸ்டைல். உலக வீராங்கனைகளின் கவனத்தை அறிமுகமான சில நாள்களிலே தன் பக்கம் திருப்பியுள்ளார் வெர்மா.
பாய்ஸ் கட்டிங்கில், ஓப்பனிங் இறங்கி பவர்-ப்ளே ஆடுவதில் கில்லாடி. எதிரணி பந்துவீச்சாளர்களுக்கும் பெரும் சிம்ம சொப்பனமாக விளங்கும் இவரது வயது 16. வேகப்பந்து வீசினாலும் அச்சம் இல்லாமல் க்ரீஸை விட்டு வெளியே வந்து ஆடும் ஷாட், அவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதியில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் கவனம் பெற்றார் வெர்மா. அதிரடியில் இந்திய ஸ்டார் வீராங்கனை மந்தானாவுக்கு மேல் செல்கிறார் வெர்மா என அனைவரும் புகழ்கின்றனர்.
ஹரியானா மாநிலம் ரோடாக் பகுதியில் பிறந்தவர் வெர்மா. அவரை 9 வயதில் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தார் அவரது தந்தை. கடுமையான பயிற்சியால் அங்கு இருந்த பாய்ஸ்க்குக் கடினமான போட்டியாளராகத் திகழ்ந்தார் வெர்மா. கடந்த ஆண்டு இந்திய அணிக்குத் தேர்வான அவர், தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் 30 வருடச் சாதனையை முறியடித்தார் வெர்மா. சச்சினின் முதல் சர்வதேச அரைசதம் அவரது 16 வயதில் அடிக்க, வெர்மா தனது 15 -வது வயதிலே அதை முறியடித்தார்.
தற்போதைய டி-20 உலகக் கோப்பையில் கலக்கி வரும் வெர்மா சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பட்டையை கிளப்பி வருகிறார். இதோ வெர்மாவின் அதிரடிக்கு ஒரு சாம்பிள் வீடியோ...
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அன்னைக்கு’... ‘காரில் அவங்க போட்டோ இல்லனா’... ‘தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட’... ‘முன்னாள் இந்திய வீரர் அதிர்ச்சி தகவல்’!
- “இவர் டீமில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது”! பிரபல வீரர் ட்வீட்டால் இந்திய அணியில் மாற்றம் நிகழுமா?
- “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இவர்தானா?”... பிரபல வீரரின் பதில்!