27 வருஷ டென்னிஸ் சாம்ராஜ்யம்.. தோல்வியுடன் விடை பெற்றார் செரீனா வில்லியம்ஸ்.. வேதனையில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது நியூயார்க் நகரில் வைத்து நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

அதன்படி, நேற்று (02.09.2022) நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3 ஆவது சுற்றில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக் ஆகியோர் மோதி இருந்தனர்.

இதில், ஆஸ்திரேலியா வீராங்கனையான அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார். முன்னதாக, மகளிர் இரட்டையர் பிரிவிலும் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்திருந்த நிலையில், ஒற்றையர் பிரிவிலும் தோல்வி அடைந்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்பாக, இந்த தொடருடன் தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார். அப்படி இருக்கும் நிலையில், 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.  

தன்னுடைய கடைசி போட்டியில் தோல்வியுடன் செரீனா வில்லியம்ஸ் விடை பெற்றுள்ள நிலையில், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்துள்ளது, அவரது ரசிகர்கள் பலரையும் கடும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்ந்து, தனது கடைசி போட்டிக்கு பின்னர், இனிமேல் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்திருந்த செரீனா, தனது ஓய்வினை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் கிடையாது என்றும், அதே வேளையில் எனக்கும் இது தெரியாது என்றும் அவர் கூறி உள்ளார்.

SERENA WILLIAMS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்