"கேப்டன் பதவி இல்லையா...? இந்த நேரத்துல 'இவரை' பார்த்துக் கத்துக்கணும்"- கோலிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனின் ‘ஹின்ட்'..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிக்க, அடுத்த கேப்டன் ஆக தலைமைதாங்க தயாராகி உள்ளார் ரோகித் சர்மா. அடுத்து வருகிற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மாதான் இந்திய அணியை தலைமை ஏற்று நடத்த உள்ளார்.
கேப்டன் பதவி இல்லாத சூழலில் அணியில் விராட் கோலி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டி உள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஆன வீரேந்திர சேவாக். கோலி அடுத்ததாக தன்னுடைய டி20 போட்டிகளின் போது அணியில் ‘சச்சின் டெண்டுகர்’ போல் நடந்து கொண்டு புதிய திறன்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சேவாக்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில், “கோலி இன்று இருக்கும் ஒரு நிலையில் அன்று சச்சின் டெண்டுல்கரும் இருந்தார். கேப்டன் ஆக இருந்த சச்சின் தனது பதவியில் இருந்து விலகிய பின்னர் மூன்று பெரும் கேப்டன்களின் கீழ் விளையாடினார். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகிய மூன்று கேப்டன்களும் தங்களது தலைமை தாங்கும் திறனுக்காக பிரபலம் அடைந்தவர்கள். தான் கேப்டனாக இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவங்களை எல்லாம் தொடர்ந்து தனக்கு அடுத்து வந்த கேப்டன்களுக்கு சொல்லிக் கொடுப்பார் சச்சின்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த நேரத்தில் கோலி, சச்சின் வழியைத்தான் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவேன். அனுபவத்தை புது கேப்டனுக்கு வழங்குலாம். ஆனால், அவற்றை எல்லாம் செயல்படுத்தும் திறன் அந்தப் புது கேப்டனின் பொறுப்பு. இதற்கு முன்னர் கூட கோலி தானும் ரோகித்தும் சிறந்த தலைவர்கள் என்றும் எப்போதும் இந்திய அணியின் நலனுக்காக இளம் வீரர்களின் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்போம் என்றும் கூறியிருந்தார். அதைப் போலவே அவர் செயல்பட வேண்டும் என நினைக்கிறேன்.
மேலும், ஒவ்வொரு கேப்டனும் அடுத்ததாக துணை கேப்டனை மெருகேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அணியின் பலம் நிலைத்து இருக்கும். கடந்த 2007-ம் ஆண்டு தோனி கேப்டன் ஆக அணியை வழி நடத்திய போது எனக்கு துணை கேப்டன் பதவியை வழங்கினார்கள். ஆனால், அணி நிர்வகத்திடன் ஒரு இளம் வீரரை துணை கேப்டன் ஆக நியமிக்கும்படி நான் கேட்டுக் கொண்டேன். காரணம், அப்போதுதான் அந்த இளம் வீரர் வளர்ந்து அடுத்த கேப்டன் ஆக தனது அணியை வழிநடத்த முடியும். அன்று, எனது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இன்று, கோலி இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது இந்திய கிரிக்கெட் அணியின் வருங்காலத்துக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மூணு 'இளம்' வீரர்களுக்கு வாய்ப்பு...! யாரெல்லாம் வெளிய...? 'நியூசிலாந்து' அணியுடனான போட்டிக்கு 'இந்திய' அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ...!
- அன்னைக்கு 'அவர' தூக்கிட்டு ரோகித் ஷர்மாவ போடலாம்னு இருந்தாங்க...! நானும் 'தோனியும்' தான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி 'அவர' விளையாட வச்சோம்...! - சேவாக் பகிர்ந்த தகவல்...!
- 'நான் இனிமேல் கேப்டனா இல்லன்னாலும்...' 'அதெல்லாம்' நிறுத்த மாட்டேன்...! 'உருக்கமாக தெரிவித்த கோலி...' - கலங்கும் ரசிகர்கள்...!
- இதுல எப்படிங்க இவர் பேரை ‘மிஸ்’ பண்ணீங்க..? ஹர்பஜன் சிங் வெளியிட்ட லிஸ்ட்.. கொதித்த ‘கோலி’-ன் ரசிகர்கள்..!
- ‘எனக்கு அப்புறம் கேப்டன் அவர்தான்’!.. டி20 கேப்டனாக கடைசி போட்டி.. டாஸ் ஜெயிச்சதும் கோலி கொடுத்த சர்ப்ரைஸ்..!
- கதம், பை.. பை.. டாடா குட் பை...! 'டி-20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய நிலையில்...' - மீம்ஸ் போட்டு 'மரண பங்கம்' செய்த முன்னாள் வீரர்கள்...!
- ‘ஆஹா இதுமட்டும் அன்னைக்கு நடந்திருக்க கூடாதா..!’ டாஸ் ஜெயிச்சதும் சிரிச்சிக்கிட்டே ‘கோலி’ சொன்ன பதில்..!
- உங்க 'குசும்புக்கு' ஒரு அளவே இல்லையா...? அஸ்வின் கிட்ட 'என்ன பேசுனீங்க'ன்னு கேட்டதுக்கு ரோஹித் சொன்ன பதில்...! - சுத்தி நின்னவங்க எல்லாரும் 'வெடிச்சு' சிரிச்சிட்டாங்க...!
- என்னோட சாய்ஸ் கண்டிப்பா 'அவரு' தான்...! 'அடுத்த கேப்டன்' ஆகுறதுக்கு முழு தகுதி 'அவருக்கு' இருக்கு...! - வெளிப்படையாக தெரிவித்த சேவாக்...!
- மனுசன் பேட்டிங்கில் எல்லாம் ‘கில்லாடி’ தான்.. ஆனா அந்த விஷயத்துலதான் ‘கோலி’ கோட்டை விட்றாரு.. முன்னாள் வீரர் விமர்சனம்..!