‘ஆன்லைன் கும்பலை விட இந்தியா மேல அவருக்கு ரொம்பவே அக்கறை இருக்கு’.. வெளுத்து வாங்கிய சேவாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்காக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது கிடையாது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் 12 முறை பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடியுள்ளது. அதில் அனைத்து தடவையும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இந்த சூழலில் நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்த அணியின் இந்த தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிதான் (Mohammed Shami) காரணம் என பலரும் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். மேலும் மத ரீதியாக விமர்சித்து அவரை துரோகி என்றும், இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பதிவிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag) கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘ஆன்லைனில் முகமது ஷமி மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் ஒரு சாம்பியன். இந்திய தொப்பியை அணிந்திருக்கும் அனைவருக்கும், ஆன்லைன் கும்பலை விட இந்தியாவின் மீது அக்கறை உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விவிஎஸ் லட்சுமண், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் ஆகியோர் முகமது ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹாலும் முகமது ஷமிக்கு ஆதவாக ட்வீட் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்