என்னங்க ரூல்ஸ் 'இது'... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயமா...? - இந்திய கிரிக்கெட் அணியை விளாசி தள்ளிய சேவாக்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த தொடரில் கேப்டன் விராட், யுஷ்வேந்திர சாஹலுக்கு பதிலாக, குல்தீப் யாதவை களமிறக்கினார்.

கேப்டன் விராட்டின் இந்த செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரான விரேந்திர் சேவாக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

                               

அவர் கூறும் போது, 'பந்துவீச்சாளர்கள் ஒரு போட்டியில் சொதப்பினால் கூட உடனே ஓரம் கட்டப்பட்டு விடுகிறார்கள். ஆனால், கே.எல்.ராகுல் போன்றவர்கள் தொடர்ந்து 4 போட்டிகளில் சொதப்பினாலும் கூட, அவர் சிறந்த பேட்ஸ்மேன் என நம்பி, அவரால் நன்றாக விளையாட முடியும் எனக் கூறி அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

                                        

ஆனால் உதாரணமாக, சாஹல் போல பும்ராவும் 4 போட்டிகளில் சொதப்பினால், அவரை வெளியேற்ற நினைப்பீர்களா? இல்லை, அவரால் சிறப்பாக விளையாட முடியும். மீண்டும் நல்லமுறையில் பந்துவீசுவார் எனக் கூறுவீர்களா?' என தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த சேவாக் கேட்டுள்ளார்.

                        

இதற்கு காரணம் முன் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் களமிறங்கிய ஸ்பின்னர் யுஷ்வேந்திர சாஹல், அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்களை வீழ்த்தவும் திணறினார். குறிப்பாக, முதல் இரண்டு போட்டிகளில் 40+ ரன்களும், அடுத்த போட்டியில் 34 ரன்களும் வாரி வழங்கினார்.

கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் நான்கு டி20 போட்டிகளில் படுமோசமாகச் சொதப்பினார். இதனால், கடைசிப் போட்டியில் பெஞ்சில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்