நான் கடைசி 'நாலு ஓவர்' நல்லா தூங்கிட்டேன் பா...! 'தூக்கம் வராதவங்க இவங்க விளையாடுறத கண்டிப்பா பாருங்க...' - ஐபிஎல் அணியை வச்சு செய்த சேவாக்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இவர்களின் ஆட்டத்தைப் பார்த்தால் நன்றாக தூக்கம் வரும் என ஐபிஎல் அணியை சேவாக் கலாய்த்து தள்ளியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது அபுதாபி அமீரகத்தில்  நடந்து வரும் இந்த கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய மூன்று அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியேறியுள்ளது. மேலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரான சேவாக் ஹைதராபாத் அணியை விமர்சித்து பேசியுள்ளார்.

அதில், 'சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆட்டத்தொடரின் முதலில் இருந்தே மிக மோசமாக ஆடி வருகிறது. இந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட தேறுமளவிற்கு இல்லை.

இந்த ஆண்டு விளையாட்டு தொடர் முழுவதுமே அப்துல் சமத் மட்டும் மூன்று சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தூக்கமே வந்திருக்கும்.

சென்ற ஆட்டத்தின் கடைசி நான்கு ஓவர்களின் போது நானே தூங்கிவிட்டேன். திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது ஹைதராபாத் அணி 118 ரன்கள் மட்டுமே எடுத்திந்ததும் மீண்டும் தூங்கிவிட்டேன்' என கூறியுள்ளார்.

2021-ஆம் ஆண்டு ஐபிஎல் பிளேஆஃப்பில் நான்காவது இடத்தை பிடிக்க மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் கடுமையாக போராடி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்