'தோனி கேப்டனா இருக்குறப்போ...' அஸ்வினை 'அப்படி'லாம் பண்ண 'பெர்மிசன்' கொடுக்கவே மாட்டாரு...! - முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அஸ்வின் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார்,
ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு மாதிரியாக வீச நினைத்து வீசினார். தோனி இதனை எப்போதும் அனுமதிக்க மாட்டார் என்று அஸ்வினின் பரிசோதனைகளை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது லெக் ஸ்பின், கேரம் பந்து, தூஸ்ரா என்று ஒவ்வொரு பந்தையும் புது விதமாக வீசினார். வைட் ஆப் த கிரீசிலிருந்தும், ஸ்டம்புக்கு பக்கத்தில் இருந்தும் மாற்றி மாற்றி பந்தை வீசினார் அஸ்வின். ஆனால், எங்கு ஆஃப் ஸ்பின் வீசினால் பந்தை அடித்து கிழித்து விடுவார்களோ என்ற பயம்தான் அவரது பலத்திலிருந்தே அவரை விலக்கியுள்ளது என சேவாக் கூறியுள்ளார்.
இப்படி பரிசோதனை முயற்சிகளை செய்வதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புகளை அஸ்வின் இழக்க நேரிடுகிறது என தெரிவித்துள்ளார். ஆஃப் ஸ்பின் போட்டுக்கொண்டே பரிசோதனை பந்துகளை திடீரென்று எதிர்பாராதவிதமாக வீசி விக்கெட் எடுக்கும் ஆற்றல் கொண்டவர்தான் அஸ்வின். ஒரு பொறுப்புணர்வு உள்ள கேப்டன் பரிசோதனை பந்து வீசுவதை அனுமதிக்க மாட்டார். அந்த விதத்தில் தோனி ஒரு ஆளுமையுள்ள கேப்டன் என சேவாக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பெட்டியில் சேவாக் கூறியதாவது, "ஆஃப் ஸ்பின் போட்டால் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் நினைக்கலாம். அதனால் தான் அவர் பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறார். எம்.எஸ்.தோனி விக்கெட் கீப்பராக இருந்த போது அஸ்வினை ஒருபோதும் பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கமாட்டார்.
அவர் வீசும் விதம் பேட்டிங் செய்பவரை விக்கெட் எடுக்கும் வாய்ப்புக் குறைவுதான். ஆனாலும், ஆஃப் ஸ்பின் வீசினால் எல்பி, பவுல்டு ஆக வாய்ப்பு அதிகம். இதேப் போன்று பரிசோதனைப் பந்துகளை வீசும்போது அந்த வாய்ப்பு மிகவும் குறைகிறது. ஒரு சீனியர் பவுலராக மிடில் ஓவர்களில் அதிக விக்கெடுகளை எடுத்துத் தர வேண்டியது அவரது பொறுப்பு" என சேவாக் கூறியுள்ளார்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குழந்தைங்க கூட அடிக்கடி 'டயப்பரை' மாத்திக்கிட்டு இருக்காது...! 'பஞ்சாப் அணியை பங்கம் செய்த முன்னாள் வீரர்...' 'இவருக்கு இதே வேலையா போச்சு...' - கொந்தளிக்கும் ரசிகர்கள்...!
- 'யப்பா, கிரிக்கெட் விளையாட சொன்னா...' 'ஹாக்கி விளையாடிட்டு இருக்கீங்க...' சிஸ்கே அணியை 'கிண்டல்' செய்த முன்னாள் வீரர்...! மேட்ச் 'முடிஞ்ச' உடனே வச்சு செய்த நெட்டிசன்கள்...!
- நான் சொன்ன ரெண்டு டீம்ல 'ஒண்ணு' தான் 'கப்' அடிக்க போறாங்க...! 'மத்தவங்களுக்கெல்லாம் இந்த தடவ சான்ஸ் இல்ல...' - உறுதியாக சொல்லும் ஷேவாக்...!
- ஆசிரியர் பணிக்கு 'தோனி' விண்ணப்பித்தாரா...? 'அப்பா 'பெயர' பார்த்ததும் 'கன்ஃபார்ம்' ஆயிடுச்சு...! - போன் செய்து பார்க்கையில் தெரிய வந்த உண்மை...!
- VIDEO: கிரவுண்ட்ல 'அவரு' இப்படி தான் இருந்தாரு...! 'டிவிட்டர்ல வீடியோ வெளியிட்டு நியுசிலாந்து வீரரை...' - 'கிண்டல்' செய்த சேவாக்...!
- அவரு கேட்ட கேள்விய 'ஃப்ரேம்' போட்டு வச்சுக்கோங்க...! 'முன்னாள் வீரரை கலாய்த்த நெட்டிசன்...' - தரமான 'பதிலடி' கொடுத்த சேவாக்...!
- 'நான் straight drive கத்துக்கிட்டது 'இப்படி' தான்'!.. அதிரடி பேட்ஸ்மேனாக மாறியது எப்படி?.. பின்னணியை உடைத்த சேவாக்!
- ஊரே 'தலையில' தூக்கி வச்சு கொண்டாடுறாங்க...! 'ஏன்'னு எனக்கு புரியவே இல்ல...!- 'இந்திய' வீரர் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன 'கருத்தால்' பரபரப்பு...!
- "இந்தியா 'டீம்'ல அந்த 'சான்ஸ்' ஒருத்தருக்கு மட்டும் தான் கெடைக்கும்னா.. அதுக்கு பொருத்தமான ஆளு 'ஜடேஜா' மட்டும் தான்.." 'முன்னாள்' வீரர் சொல்லும் 'காரணம்'!!
- "இந்தியாவுக்கு ஒரு காலத்துல 'சேவாக்' எப்படியோ, அதே மாதிரி தான் இந்த பையனும்.." அவர போய் இவ்ளோ சீக்கிரம் 'ஓரம்' கட்டுறீங்களே?. "இது எல்லாம் நல்லா இல்ல!!"