"நல்ல வேள அன்னைக்கி நான் செஞ்சுரி அடிக்கல.." சிரித்துக் கொண்டே சொன்ன சச்சின்.. இதுனால தான் அவரு 'லெஜெண்ட்'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 2021 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கடுமையாக திணறி வருகிறது.
Also Read | "அட, அதிபர் கிம் ஜாங் பண்ண விஷயமா இது??.." பெண் செய்தியாளருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி ..
முதல் நான்கு போட்டிகளில், கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்திருந்தது.
தொடர்ந்து பெங்களூர் அணிக்கு எதிராக தங்களின் ஐந்தாவது லீக் போட்டியில், சென்னை அணி வெற்றி பெற்று, 15 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பெற்றிருந்தது.
சதத்தை தவறவிட்ட ஷிவம் துபே
இந்த போட்டியில், சென்னை அணி வீரர்களான உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்தனர். இருவரும் சிக்ஸர் மழை பொழிய, தன்னுடைய சதத்தை ஐந்து ரன்களில் கோட்டை விட்டார் ஷிவம் துபே. கடைசி பந்தில், சிக்ஸர் அடித்தால் சதமடிக்கலாம் என்ற நிலையில், அவரால் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சதத்தை தவற விட்ட ஷிவம் துபேவுடன், சச்சின் டெண்டுல்கரை ஒப்பிட்டு, சேவாக் பகிர்ந்துள்ள விஷயம், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. "ஒரு வேளை, ஷிவம் துபே சதமடித்து, சென்னை அணி தோல்வி அடைந்திருந்தால் என்னவாகி இருக்கும்?. இப்படி பல முறை நிகழ்ந்துள்ளது. வீரர் சதமடிப்பார், ஆனால் அந்த அணி போட்டியில் தோல்வி அடைந்து விடும்" என சேவாக் தெரிவித்தார்.
நல்ல வேளை நான் செஞ்சுரி அடிக்கல..
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விஷயம் மிகவும் பொருந்தும். சச்சின் சதமடித்துள்ள பல போட்டிகளில், இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இது தொடர்பான நினைவு ஒன்றையும் சேவாக் பகிர்ந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. இதன் அரை இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்த போட்டியில் 85 ரன்கள் அடித்திருந்த சச்சின், அணியின் வெற்றிக்கும் உதவி இருந்தார்.
இந்த போட்டியின் போது நடந்த ருசிகர சம்பவம் ஒன்றை சேவாக் தற்போது பகிர்ந்துள்ளார். "பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில், 80 ரன்களுக்கு மேல் அடித்திருந்த சச்சின் அவுட்டான பிறகு, ட்ரெஸ்ஸிங் ரூமூக்கு வந்தார். அப்போது சிரித்து கொண்டே வந்த அவரிடம், அதற்கான காரணத்தை கேட்டேன். அவர் அதே சிரித்த முகத்துடன், 'நான் சதமடிக்காமல் போனது நல்லது தான். அப்படி நடந்து, ஒரு வேளை போட்டியில் நாம் தோற்றுக் கூட போகலாம்' என கூறினார்.
அவரும் ஒரு மனிதர் தான். சதங்கள் முக்கியமில்லை, வெற்றி தான் முக்கியம் என்பது அவருக்கு தெரியும். அதுவும் 100 சதங்களை அடித்த ஒருவர் அப்படி என்னிடம் பேசினார். இதனால், ஷிவம் துபேவின் 95 ரன்கள், சதத்திற்கு சமம் என்று தான் நான் கூறுவேன்" என சேவாக் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவர்கிட்ட இருந்து கத்துக்கோங்க.." அஸ்வினை மறைமுகமாக சீண்டிய யுவராஜ் சிங்??.. கமெண்ட்டில் கொந்தளித்த ரசிகர்கள்
- "ஐபிஎல் மேட்ச் இருக்கட்டும்.. முதல்'ல ஒரு அரபிக்குத்து போடலாம் வாங்க.." பீஸ்ட் மோடுக்கு போன கிரிக்கெட் வீரர்கள்
- செம கடுப்பான MI அணியின் ஓனர்.. அப்படி என்ன நடந்தது..? வைரலாகும் போட்டோ..!
- “இது எதுக்கும் ரோகித் சர்மா காரணம் கிடையாது”.. MI கேப்டனுக்கு ஆதரவாக இங்கிலாந்து வீரர் பரபரப்பு கருத்து..!
- ‘எவ்ளோ தடுத்தும் கேட்கல’.. சச்சின் காலை தொட்டு வணங்கிய PBKS கோச்.. நெகிழ்ச்சி வீடியோ..!
- 8 வருசத்துக்கு முன்னாடியும் MI இப்படிதான் தோத்தாங்க.. ஆனா அதுக்கப்புறம் நடந்ததே வேற.. அந்த ‘மேஜிக்’ மறுபடியும் நடக்குமா..?
- ‘MI டீம் மேல அப்படி என்ன கோவம்’.. வேறலெவல் சம்பவம் பண்ணிய தவான்.. ரெய்னாவின் சாதனை முறியடிப்பு..!
- வேட்டி சட்டையில் ’சிங்கநடை’ போடும் தோனி & கோ – CSK அணி பகிர்ந்த Mass pic!
- "இப்படியும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம்.." பட்டையை கிளப்பிய வாஷிங்டன் சுந்தர், நடராஜன்.. வரவேற்பை அள்ளும் வீடியோ
- காயத்தால் தீபக் சஹாருக்கு வந்த சோதனை.. பறிபோகும் மிகப்பெரிய வாய்ப்பு? கசிந்த தகவல்..!