‘சச்சினோட இந்த ஒரு சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது’.. ரகசியம் உடைத்த சேவாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சச்சின் டெண்டுல்கரின் ஒரே ஒரு சாதனையை மட்டும் விராட் கோலியால் முறியடிக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவரின் ஒவ்வொரு சாதனையையும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் (ஒருநாள் 49, டெஸ்ட் 51 ) அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை சச்சின் படைத்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி விராட் கோலி அசத்தினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மொத்தமாக 43 சதங்களை எடுத்துள்ளார். இன்னும் ஒருநாள் போட்டியில் சச்சினின் சாதனையை முறியடிக்க கோலிக்கு 7 சதங்களே உள்ளன. அதேபோல் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, அதில் 25 சதங்களை எடுத்துள்ளார். இன்னும் டெஸ்ட் போட்டியில் 26 சதங்களை கடந்தால்தான் சச்சின் சாதனை கோலியால் முறியடிக்க முடியும்.

இந்த அரிய சாதனையை கூட கோலியால் முறியடிக்க முடியும் ஆனால் சச்சினின் இந்த ஒரு சாதனையை மட்டும் விராட் கோலியால் முறியடிக்க முடியாது என சேவாக் கூறியுள்ளார். இதுவரை டெஸ்ட் தொடரில் 200 போட்டிகளில் விளையாடிய ஒரே விரர் சச்சின்தான். விராட் கோலி இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளாதால் இந்த அரிதான சாதனையை அவரால் முறியடிக்க முடியாது என சேவாக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற உள்ளது.

BCCI, VIRATKOHLI, VIRENDERSEHWAG, SACHINTENDULKAR, RECORD, ODI, TEST, INDVWI, TEAMINDIA, CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்