‘அவரு ஃப்ர்ஸ்ட் இத பண்ணனும்’.. ‘இந்திய வீரருக்கு அட்வைஸ் சொல்லி’.. ‘பாகிஸ்தானை கலாய்த்துவிட்ட சேவாக்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை தற்போது 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கை நடத்தி தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தார்.
எனினும் ஸ்ரீசாந்த்துக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை தற்போது 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீசாந்த் மீதான தடை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது.
வாழ்நாள் தடை குறைக்கப்பட்டது குறித்து பேசியுள்ள ஸ்ரீசாந்த், “இப்போது எனக்கு 36 வயதாகிறது. அடுத்த வருடம் 37 வயதாகிவிடும். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 87 விக்கெட்டுகள் எடுத்துள்ளேன். இனி 100 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், “ஸ்ரீசாந்த் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி. முதலில் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியம்” எனக் கூறியுள்ளார். அதற்கு செய்தியாளர்கள், “பாகிஸ்தான் வீரர் முகமது ஆமீர் இதேபோல தண்டனை காலம் முடிந்து நேரடியாக சர்வதேச போட்டிகளில் விளையாடினாரே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு பதிலளித்த சேவாக், “பாகிஸ்தானில் எதுவேண்டுமானாலும் நடக்கும்” எனக் கலாய்த்துள்ளார்.
மற்ற செய்திகள்
‘அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச நெக்லஸ்’... ‘வீட்டில் தனியாக இருந்த’... ‘11 வயது சிறுவனின் துணிகர செயல்’!
தொடர்புடைய செய்திகள்
- ‘சந்தேகத்துக்குரிய வகையில் விளையாடியதாக’.. ‘பிரபல கேப்டனுக்கு தடை விதிக்க ஐசிசி முடிவு..?’
- ‘தலைமை பயிற்சியாளர் ஆன முன்னாள் சிஎஸ்கே வீரர்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..! எந்த அணிக்கு தெரியுமா..?
- 'அடுத்த அதிரடிக்கு தயாராகும் டெல்லி அணி'... 'முக்கிய வீரரை கொண்டுவர முயற்சி'!
- ‘8 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்’ ‘விருப்பம் இல்லாம அவர்கிட்ட கொடுத்தோம்’.. வைரலாகும் சேவாக் ட்வீட் ..!
- 'கோவத்துல குறுக்க இருந்தத மறந்துட்டனே.. இப்ப என்ன ஆச்சு?'. முக்கிய வீரருக்கு '2 வருஷம்'.. தடை!
- ‘சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவருக்கு’.. ‘அதப்பத்தி எல்லாம் என்ன தெரியும்..?’ பிசிசிஐ சாடியுள்ள முன்னாள் வீரர்..
- கண்டிப்பா வருவேன்.. ‘ரகசிய ஆசையை உடைத்த பிரபல வீரர்..’ உற்சாகத்தில் ரசிகர்கள்..
- வைரலாகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள.. ‘இந்திய அணியின் ஃபன் மொமெண்ட்ஸ் வீடியோ..’
- ‘போட்டிக்கு 200 ரூபாயில் இருந்து இந்திய அணி வரை..’ பிரபல ஐபிஎல் பௌலரின் அசத்தல் பயணம்..
- ‘கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி பயிற்சியாளர்’... ‘எந்த ஐபிஎல் அணிக்கு நியமனம்??’