"அவரு பண்ண பெரிய தப்பே இதான்.. இல்லன்னா இப்டி எல்லாம் தோத்துருக்க வேணாமே.." 'சேவாக்' சொன்ன 'விஷயம்'.. 'ஐபிஎல்' அணிக்கு வந்த 'சோதனை'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதி வரும் நிலையில், நேற்று நடைபெற்றிருந்த போட்டியில், கொல்கத்தா அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியிருந்தது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, 177 ரன்கள் மட்டுமே எடுத்ததால், கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், ஹைதராபாத் அணியின் மூன்றாம் வீரராக களமிறங்கிய மனிஷ் பாண்டே (Manish Pandey), கடைசி வரை களத்தில் இருந்த நிலையில், 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல், கடைசியில் சில ஓவர்களில் பவுண்டரிகள் எதுவும் அடிக்காத மனிஷ் பாண்டே, ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸ் ஒன்றை மட்டும் அடித்தார். இதனால், அவரது பேட்டிங் மீது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், பல விதமான கருத்துக்களை முன் வைத்தனர்.


இந்நிலையில், ஹைதராபாத் அணி இப்படி சொற்ப ரன்களில் தோல்வி அடைந்திருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் (Sehwag) தெரிவித்துள்ளார். 'பேர்ஸ்டோவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த மனிஷ் பாண்டே, பேர்ஸ்டோ அவுட்டாகிப் போனதும் சற்று தடுமாறத் தொடங்கி விட்டார். அவர் அதிகம் திணறலை சந்தித்ததால், சிறப்பாக விளையாட முடியாமல் போனது. மேலும், அவர் பந்துகளை சிக்சருக்கு அடிக்கவும் முயற்சிக்கவில்லை. இந்த போட்டியில், மனிஷ் பாண்டே நிச்சயம் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும்.

முன்னதாகவே, தன்னை  நெருக்கடிக்குள் ஆக்காமல், தன்னை ஸ்டெடியாக ஆட மனிஷ் பாண்டே முயற்சி செய்திருந்தால், ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்காது. அவர் நெருக்கடியை சமாளித்து, சில பவுண்டரிகளை அடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும்' என சேவாக் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்