அவரு கேட்ட கேள்விய 'ஃப்ரேம்' போட்டு வச்சுக்கோங்க...! 'முன்னாள் வீரரை கலாய்த்த நெட்டிசன்...' - தரமான 'பதிலடி' கொடுத்த சேவாக்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுட்விட்டரில் ஷேன் வார்னை கலாய்த்த நெட்டிசன்களை சேவாக் இடையில் புகுந்து மூக்கை உடைத்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியில் இருக்கும் பௌலர்கள் குறித்து ஷேன் வார்ன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடிருந்தார். இந்நிலையில் வார்னின் கருத்திற்கு சிலர் கிண்டலும் அடித்துள்ளனர்.
ஷேன் வார்ன் தன் ட்விட்டர் பதிவில், 'ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதியில் நியூசிலாந்து ஒரு ஸ்பின்னரை அணியில் சேர்க்காதது ஏமாற்றமளிக்கிறது.
பவுலர்களின் காலடித்தடங்கள் பெரிய அளவில் பிட்சில் தெரிவதால் இந்தப் பிட்ச் ஸ்பின் ஆகும் வாய்ப்புள்ளது. அப்படி ஸ்பின் எடுக்கும் பட்சத்தில் இந்தியா 275/300 ரன்கள் எடுக்குமேயானால் மழை பெய்யும் முன்பே மேட்ச் முடிந்து விடும்' என ட்வீட் செய்திருந்தார்.
ஷேன் வார்னனின் இந்த ட்விட்டருக்கு மக்கா என்ற ஒரு நெட்டிசன், 'ஷேன் உங்களுக்கு ஸ்பின் எப்படி ஒர்க் செய்யும் என்று தெரியுமா? பிட்ச் வறண்டிருக்க வேண்டும் இங்கோ மழை பெய்கிறது' எனக் கிண்டலடித்துள்ளார். அவரை தொடர்ந்து பலர் சர்காஸ்ட்டிக்காக கிண்டலடித்துள்ளனர்.
இதனை கண்ட நம் சேவாக்கோ நெட்டிசன்களைக் கேலி செய்யும் விதமாக, 'அதானே, இவரது கேள்வியை ஃப்ரேம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் வார்ன். ஸ்பின்னை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்' என்று சிரிப்பு எமோஜியைப் போட்டு அந்த நெட்டிசனைக் கிண்டல் செய்துள்ளார்.
இதற்கு காரணம் பந்துகள் திரும்பவே திரும்பாது என்ற பிட்ச்களிலும் ஷேன் வார்ன் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ள மிகப்பெரிய ஸ்பின் மேதை. அவருக்கு என்னமோ ஸ்பின் என்றால் என்னவென்றே தெரியாத மாதிரி கலாய்த்து சிலர் பதிவிடுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நான் straight drive கத்துக்கிட்டது 'இப்படி' தான்'!.. அதிரடி பேட்ஸ்மேனாக மாறியது எப்படி?.. பின்னணியை உடைத்த சேவாக்!
- "இந்தியாவுக்கு ஒரு காலத்துல 'சேவாக்' எப்படியோ, அதே மாதிரி தான் இந்த பையனும்.." அவர போய் இவ்ளோ சீக்கிரம் 'ஓரம்' கட்டுறீங்களே?. "இது எல்லாம் நல்லா இல்ல!!"
- "அந்த பையனோட திறமைக்கு, 'ஆஹா, ஓஹோ'ன்னு பாராட்டி இருக்கணும்.. ஆனா, யாருமே கண்டுக்கல.." 'இளம்' வீரருக்காக ஆதங்கப்பட்ட 'சேவாக்'!!
- "உங்களுக்கு 'பேட்டிங்' தானே பிரச்சன??.." அப்போ அந்த 'பையன' உள்ள கொண்டு வாங்கய்யா.. அப்புறம் பாருங்க.." 'RCB'க்கு சிறப்பான ஐடியா குடுத்த 'சேவாக்'!!
- 'என்ன தகுதி வேணும்?.. எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு!.. சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனை அடையாளம் காட்டிய சேவாக்!
- "இந்த விஷயத்துல 'சிஎஸ்கே' தான்யா 'பெஸ்ட்'.. அவங்கள பாத்தாச்சும் கத்துக்கோங்க.." விளாசித் தள்ளிய 'சேவாக்'!!
- "மேட்ச் இப்டி 'ட்விஸ்ட்' ஆகுற நேரத்துல.. அவரு எங்கய்யா இருந்தாரு??.. இவ்ளோ போராடியும் எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல??.." கழுவி ஊற்றிய 'சேவாக்'!!
- "இவரு கேப்டனா இருக்குறது, 'டீம்'லயே யாருக்கும் பிடிக்கல போல.. என்னங்க இப்டி இருக்காரு??.." விமர்சனத்தை அடுக்கித் தள்ளிய 'சேவாக்'!!
- 'எவ்ளோ முட்டாள்தனமான விஷயம் 'இது'!.. 'நீங்க சூர்யகுமாருக்கு செஞ்சத... சேவாக்கிடம் செய்ய முடியுமா'?.. ரோகித்தை வெளுக்கும் ஜாம்பவான்கள்!
- "அவர எல்லாம் 'தோனி' கூட 'கம்பேர்' பண்ணாதீங்க.. அப்டி ஒண்ணும் பெருசா அவரு சாதிக்கல.." செம கடுப்பில் பேசிய 'சேவாக்'!!