ரொம்ப பெரிய 'தப்பு' பண்ணினது 'அவரு' தான்...! 'அஸ்வின்-மோர்கன் சண்டையில்...' 'மிகப்பெரிய குற்றவாளி' என 'கொல்கத்தா வீரரை' கூறிய சேவாக்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் டி-20 போட்டி இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி  மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்றது. அப்போது கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார்.

பந்தை அடித்துவிட்டு ரிஷப் பந்த் மற்றும் ரன் ஓடுகையில் திரிபாதி பந்தை பிடித்து எறிய அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் சென்றது. பொதுவாக ஃபீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். ஆனால் அஸ்வின் இதைப் பார்த்த பிறகும் 2-வது ரன் ஓடினார்.

கிரிக்கெட்டில் சொல்லப்படாத சில மரபுகள் இருக்கின்றன. இதை பலர் கடைபிடிப்பதோடு, பலர் கடைபிடிக்காமலும் இருக்கின்றனர். அஸ்வினின் இந்த செயலால் ஆடுகளத்தில் சிறிது நேரம் சர்ச்சை ஏற்பட்டது.

அதோடு, அஸ்வின் டிம் சவுதி வீசிய 20-வது ஓவர்களின் முதல் பந்தில் 9 ரன்னில் அவுட் ஆனார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார். அதைக்கேட்ட அஸ்வினும் பதிலுக்கு ஏதோ கூறியதோடு, களத்தில் இருந்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்த போது வாக்குவாதம் சண்டையாக மாறும் அளவிற்கு சென்றது.

அப்போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நடுவர்கள் அனைவரும் மோர்கன் மற்றும் அஸ்வினை சமாதானம் செய்தனர். போட்டி முடிந்த பின் இதுகுறித்து பேட்டி அளித்த தினேஷ் கார்த்திக், ஏன் மோதல் நடந்தது எனக் கூறி விளக்கம் அளித்தார்.

ஆனால், தினேஷ் கார்த்திக் செய்த இந்த செயல் தான் கிரிக்கெட் ஆடுகளத்தில் நடந்த விஷயம் பெரிதாவதற்கு காரணம் என சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய முன்னாள் கேப்டன் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

அதில், 'அஸ்வின், மோர்கன் மோதல் பெரிதான விவகாரத்தில் மிகப்பெரிய குற்றவாளி தினேஷ் கார்த்திக்தான். பொதுவாக கிரிக்கெட் தொடரில் இதுபோன்ற வாக்குவாதம் வருவது இயல்பு. அதனை நாம் ஆடுகளத்திலேயே விட்டுவிட வேண்டும்.

அதை விட்டுவிட்டு மோர்கன் என்ன பேசினார் என்பதை தினேஷ்க் கார்த்திக் கூறாமல் இருந்திருந்தால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாக உருவாகியிருக்காது.

யாரோ ஒருவர் சிந்தித்ததற்கும் என்ன விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது' என காட்டமாக விமர்சித்துள்ளார் விரேந்திர சேவாக்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்