"மேட்ச் இப்டி 'ட்விஸ்ட்' ஆகுற நேரத்துல.. அவரு எங்கய்யா இருந்தாரு??.. இவ்ளோ போராடியும் எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல??.." கழுவி ஊற்றிய 'சேவாக்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டேவிட் வார்னர் (David Warner) தலைமையான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனில் 5 போட்டிகள் விளையாடி, ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

இதில், நேற்று டெல்லி அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், கையில் இருந்த வாய்ப்பை அதிர்ஷ்டம் இல்லாததால், ஹைதராபாத் அணி தவற விட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ (Bairstow), ஆரம்பத்திலே அதிரடி காட்டியிருந்தார்.

ஆனால், அவர் அவுட்டான பிறகு, ஹைதராபாத் அணி தடுமாற்றம் கண்டது. வில்லியம்சன் மட்டும் ஒரு பக்கம் நிலைத்து நிற்க, மறுமுனையில், விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. இறுதி ஓவரில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது, டெல்லி வீரர் ரபாடா வீசிய அந்த ஓவரில், 15 ரன்கள் அடித்ததால், போட்டி டிரா ஆனது. அதன் பிறகு, நடைபெற்ற சூப்பர் ஓவரில், ஹைதராபாத் அணி 7 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, சூப்பர் ஓவரின் கடைசி பந்தில், வெற்றி இலக்கை எட்டியது.

ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு மற்றும் தொடக்க பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ள நிலையில், மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மிகவும் சொதப்புவதால், அந்த அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனிடையே, நேற்றைய சூப்பர் ஓவரின் போது, ஹைதராபாத் அணி எடுத்த முடிவு ஒன்றும், தற்போது அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஹைதராபாத் அணி வீரர் பேர்ஸ்டோ 18 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்து அதிரடி காட்டிய போதும், சூப்பர் ஓவரில் அவரை களமிறக்காமல், வார்னர் மற்றும் வில்லியம்சன் (Williamson) ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியால், 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், பேர்ஸ்டோவை ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கவில்லை என பல கிரிக்கெட் பிரபலங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் (Sehwag), பேர்ஸ்டோவை களமிறக்காதது பற்றி, ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். 'பேர்ஸ்டோ கழிவறையில் இருந்தால் மட்டுமே ,அவரால் சூப்பர் ஓவரில் களமிறங்கி, ஆடியிருக்க முடியாமல் போயிருக்கும். 18 பந்துகளில் 38 ரன்கள் அடித்த போதும், அவர் சூப்பர் ஓவரில் ஆடவில்லை.


ஹைதராபாத் வெற்றிக்கு வேண்டி கடினமாக போராடியது. ஆனால், இது போன்ற விசித்திர முடிவுகளுக்கு, தங்களது அணி மீதே அவர்கள் குற்றஞ்சாட்டிக் கொள்ள வேண்டும்' என ஹைதராபாத் அணி மீது சேவாக் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நிக் காம்ப்டனும், ஹைதராபாத் அணியின் முடிவு குறித்து, கேள்வி எழுப்பி, ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்