"என்ன மனுஷன்யா இவரு!..." அதிகாரி போட்ட 'ட்வீட்'... சற்றும் தாமதிக்காமல் உதவிய 'மேக்ஸ்வெல்'... குவியும் 'பாராட்டு'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடையே மூன்றாவது டி 20 போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றிருந்தது.

"என்ன மனுஷன்யா இவரு!..." அதிகாரி போட்ட 'ட்வீட்'... சற்றும் தாமதிக்காமல் உதவிய 'மேக்ஸ்வெல்'... குவியும் 'பாராட்டு'!!

இதில், ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், ருத்ரதாண்டவம் ஆடினார். பந்துகளை மைதானத்தை சுற்றிலும் பறக்க விட்ட அவர், 31 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 8 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனிடையே, ஜிம்மி நீஷம் வீசிய 17 ஆவது ஓவரில், மேக்ஸ்வெல் சிக்சருக்கு அடித்த பந்து ஒன்று, ரசிகர்கள் அமரும் பிளாஸ்டிக் இருக்கை ஒன்றைத் துளையிட்டது.

இந்நிலையில், அதனை புகைப்படம் எடுத்த மைதானத்தின் அதிகாரி ஒருவர், 'பெண்கள் அமைப்பு ஒன்றிற்கு உதவ வேண்டி, இந்த இருக்கையை ஏலம் விடப் போகிறேன். மேக்ஸ்வெல் ஆட்டோகிராஃப் இதில் கிடைக்குமா?' என ட்வீட் செய்திருந்தார். அதிகாரியின் இந்த ட்வீட், சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலானது.

 

இந்த ட்வீட்டை பார்த்த மேக்ஸ்வெல், சற்றும் தாமதிக்காமல், அந்த உடைந்த இருக்கையில், ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்துள்ளார். மேலும், உடைந்த இருக்கையுடன் மேக்ஸ்வெல் நிற்கும் புகைப்படமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.



பெண்கள் அமைப்புக்கு உதவி செய்ய வேண்டி, மேக்ஸ்வெல் செய்த செயலும் தற்போது அதிக பாராட்டுக்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்