நீங்க லிஸ்ட்லயே இருக்க மாட்டீங்க தம்பி.. இந்திய கிரிக்கெட் அணி சீனியர் வீரரை எச்சரித்த முன்னாள் தேர்வாளர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாராவின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் சரன்தீப் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இன்று (03.01.2022) 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், அணி தேர்வாளருமான சரன்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘தற்போது உள்ள இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் கே.எல்.ராகுலை சார்ந்தே அதிகம் இருக்கிறது. ஆனால் அவரை மட்டுமே எப்போதும் நம்பியிருக்க முடியாது. கேப்டன் விராட் கோலியும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஃபார்மில் இல்லை. அதனால் அனைத்து வீரர்களும் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

குறிப்பாக புஜாரா ரன்களை அடித்தே ஆக வேண்டும். ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது இடத்திற்காக காத்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனியர் வீரர் என்ற பெயரில் அணியில் இடம்பெற்று வரும் புஜாரா தொடர்ந்து சொதப்பி வருகிறார். இது தொடர்ந்தால் அவர் அணியில் இருந்து சீக்கிரம் ஓரம் கட்டப்படுவார்’ என சரன்தீப் சிங் எச்சரிக்கை செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர்கள் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுலும் (123 ரன்கள்), மயங்க் அகர்வாலும் (60 ரன்கள்) தான். ஆனால் இப்போட்டியின் முதல் இன்னிங்சில், தான் சந்தித்த முதல் பந்திலேயே புஜாரா அவுட்டாகி வெளியேறினார். 2-வது இன்னிங்சிலும் 16 ரன்களில் ஆட்டமிழந்து புஜாரா ஏமாற்றம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PUJARA, SARANDEEPSINGH, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்