பிகில் விஜய் ஸ்டைலில் பயிற்சியாளர் செய்த காரியம்.. "அர்ஜென்டினாவ சவூதி அரேபியா தோக்கடிச்சது இப்படி தான்".. வைரலாகும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தது சவூதி அரேபியா.

Advertising
>
Advertising

Also Read | "அடங்கி போணும்ன்னு அவசியமில்ல".. "அது என் விருப்பம்".. அமுதவாணன் கிட்ட முகத்துக்கு நேரா சொன்ன ஜனனி.. வைரல் சம்பவம்!!

கால்பந்து போட்டிகளை எடுத்துக் கொண்டால், அதில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக அர்ஜென்டினா உள்ளது. மெஸ்ஸி உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ள நிலையில், இந்த முறை உலக கோப்பையை கைப்பற்றும் என்றும் அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், பலம் பொருந்திய அர்ஜென்டினாவை எதிர்த்து சவூதி அரேபியா களமிறங்கியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் போட்டி துவங்கிய 10 நிமிடங்களுக்குள் கோல் அடித்து அசத்தினார் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது அர்ஜென்டினா. ஆனால், ஆட்டம் இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறியது. சவூதி அரேபியா அணி 2 கோல்களை அடித்து அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

இறுதிக் கட்டத்தில் அர்ஜென்டினாவில் கோல் அடிக்க முடியாமல் போகவே 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது. உலக கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை 51-வது இடத்திலிருக்கும் சவூதி அரேபியா வீழ்த்தியது, கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

மேலும், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத், அர்ஜென்டினாவிற்கு எதிரான சவூதி அரேபியாவின் வெற்றியை கொண்டாடும் விதமாக விடுமுறையையும் அளித்திருந்தார். இந்த நிலையில், அர்ஜென்டினா அணிக்கு எதிரான கால்பந்து போட்டியின் முதல் பாதி முடிவடைந்த சமயத்தில், சவூதி அரேபியா அணியின் பயிற்சியாளர் சொன்ன விஷயம் தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

முதல் பாதியில் சவூதி அரேபியா அணி எந்த கோல்களையும் அடிக்கவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் தான் இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றிருந்தது. அப்படி ஒரு சூழலில், முதல் பாதி இடைவெளியின் போது சவூதி அரேபியா அணியின் பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்ட் ஆவேசமாக சில கருத்துக்களை பேசி இருந்தார்.

இரண்டாம் பாதியில் எப்படி விளையாட வேண்டும் என தனது வீரர்களிடம் ஆவேசமாக ஹெர்வ் ரெனார்ட் பேசும் வீடியோக்கள் தற்போது அதிகம் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. இதன் காரணமாக தான் இரண்டாம் பாதியில் அர்ஜென்டினா போன்ற பலம் வாய்ந்த அணியை வீழ்த்தவும் செய்திருந்தது சவூதி அரேபியா அணி.

 

Also Read | "ஒருவழியா கெடச்சுருச்சு".. தொலைஞ்சு போன TTF வாசன் பைக்.. பல போராட்டத்துக்கு அப்புறம் கெடச்சது எப்படி?

ARGENTINA, SAUDI ARABIA COACH, HERVE RENARD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்