கோவத்துல மல்யுத்த வீரர் செஞ்ச தப்பு.. வாழ்நாள் முழுவதும் விளையாட தடை விதிச்ச அதிகாரிகள்.. என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த வீரர் சதேந்தர் மாலிக்கிற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு.

Advertising
>
Advertising

தகுதி சுற்று

காமன்வெல்த் மற்றும் உலக மல்யுத்த சேம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிகளுக்கான தகுதிச் சுற்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. கே.டி.ஜாதவ் மைதானத்தில் நேற்று நடந்த 125 கிலோ எடைப்பிரிவிற்கான ஆடவர் இறுதிப்போட்டியில் இந்திய விமான படை அதிகாரியும் மல்யுத்த வீரருமான சதேந்தர் மாலிக் மற்றும் மோஹித் ஆகிய இருவரும் களம்கண்டனர்.

ஆரம்பம் முதலே பரபரப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியில், 3-0 என்ற கணக்கில் சதேந்தர் மாலிக் முன்னிலை வகித்திருந்தார். ஆட்டம் முடிய கடைசி 18 வினாடிகள் இருந்தபோது, சதேந்தரை டேக் டவுன் செய்து, மல்யுத்த மேட்டை விட்டு வெளியேற்றினார் மோஹித். பொதுவாக மல்யுத்த போட்டிகளில் டேக் டவுனுக்கு 2 புள்ளிகளும், வெளியே தள்ளியதற்கு ஒரு புள்ளியும் என மொத்தமாக 3 புள்ளிகளும் வழங்கப்படும். ஆனால், நடுவர் மோஹித்திற்கு 1 புள்ளி மட்டுமே வழங்கினார்.

ரிவ்யூ

நடுவர் 1 புள்ளி மட்டுமே வழங்கிய நிலையில், மோஹித் ரிவ்யூ கேட்டார். இதன்மூலம், மோஹித்திற்கு கூடுதலாக இரண்டு புள்ளிகள் கிடைத்தன. இரு வீரர்களும் ஒரே புள்ளிகளை பெற்றிருந்த போதிலும், கடைசியாக புள்ளி எடுத்த வீரரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவது மல்யுத்த போட்டிகளின் விதி. இதன் அடிப்படையில் மோஹித்தை வெற்றியாளராக அறிவித்தார் நடுவர்.

இதனால் கோபமடைந்த சதேந்தர் மாலிக் நடுவர் ஜக்பீர் சிங்கை தாக்கினார். இது அரங்கத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் ஓடிவந்த அதிகாரிகள், சதேந்தர் மாலிக்கை களத்தில் இருந்து வெளியேற்றினர்.

வாழ்நாள் தடை

இந்நிலையில், சதேந்தர் மாலிக் நடுவரை தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, அவருக்கு வாழ்நாள் தடையும் விதித்திருக்கிறது. இதன்மூலம் இனி அவர் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபத்தில், நடுவரை தாக்கிய மல்யுத்த வீரரான சதேந்தர் மாலிக்கிற்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வாழ்நாள் தடை விதித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8

WRESTLER, SATENDERMALIK, LIFEBAN, மல்யுத்தம், சதேந்தர்மாலிக், வாழ்நாள்தடை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்