"இது மட்டும் நடந்தா 'ஜடேஜா'க்கு 'டீம்'ல இடம் கிடைக்காது.. அதே மாதிரி சிராஜும் வேணாம்.." முன்னாள் வீரர் கொடுத்த 'ஐடியா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இன்னும் ஒரு வாரத்தில், இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக, இரு அணிகளும் தற்போது இங்கிலாந்தில் உள்ள நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வேண்டி, மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளதால், போட்டியில் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. அது மட்டுமில்லாமல், இங்கிலாந்து ஆடுகளங்கள், வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியை விட, நியூசிலாந்துக்கு இது சற்று சாதகமாக அமையும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், இந்த போட்டிக்காக, 4 கூடுதல் வீரர்களுடன் மொத்தம் 24 வீரர்களை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. 20 வீரர்களில் இருந்து, எந்தெந்த வீரர்கள் ஆடும் லெவனில் தேர்வாவார்கள் என்பதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் இந்திய அணிக்கு, வீரர்களை களமிறக்குவது பற்றி, ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் சரண்தீப் சிங் (Sarandeep Singh), டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக, இந்திய அணிக்கு சில ஐடியாக்களை வழங்கியுள்ளார். 'ஆடுகளம் மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய அணி இஷாந்த் ஷர்மா, பும்ரா மற்றும் ஷமி ஆகியோருடன் ஒரு பவுலரை கூடுதலாக களமிறக்க வேண்டும். நான்காவது ஆளாக, சிராஜுக்கு பதில், ஷர்துல் தாக்கூரைத் தான் நான் பரிந்துரை செய்வேன்.

இந்திய அணியின் கடைசி பேட்டிங் வரிசையில், ஒரு சிறந்த பேட்ஸ்மேன் வேண்டும். அந்த பணியை, ஷர்துல் தாக்கூர் சிறப்பாக செய்வார். மேலும், அவர் பந்தையும் நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவர். சவுதாம்ப்டன் மைதானத்தில், தாக்கூரின் பந்து, நன்றாக ஸ்விங் ஆகும் என நம்புகிறேன்.


மேலும், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றால், ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற இடத்தில் அஸ்வினைத் தான் களமிறக்க வேண்டும். இதனால், ஜடேஜா அணியில் இடம்பெற மாட்டார்' என சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா மற்றும் சிராஜ் ஆகியோர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இடம்பெற வேண்டும் என பலர் அறிவுறுத்தி வரும் நிலையில், அவர்கள் இருவரும் அணியில் இடம்பெற வேண்டாம் என சரண்தீப் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்