ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 'முதன்முதலாக' கோச்சிங் கொடுக்க போகும் இந்த 'பெண்' விக்கெட் கீப்பர் 'யாரு' தெரியுதா...? - இனி 'அந்த டீம' கெத்தா மாத்திடுவாங்க...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அபுதாபி ஆண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பயிற்சியாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய துவக்கத்தை உருவாக்கியுள்ளது.

Advertising
>
Advertising

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான சாரா டெய்லர், அபுதாபி ஆண்கள் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படும் முதல் பெண் கிரிக்கெட்டர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் சாரா டெய்லர்.

சாரா டெய்லர் மகளிர் கிரிக்கெட்டில், ஒரு சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தவர். அவரின் மின்னல் வேக விக்கெட் கீப்பிங் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதோடு, சாரா டெய்லர் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஒரு முறை கூறும் போது, 'இந்த 2018-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சாராதான் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட்டின் தலைச்சிறந்த விக்கெட் கீப்பர்' என புகழாரம் சூட்டினார்.

சாரா 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றப்பின் சஸ்ஸெக்ஸ் அணியின் சிறப்பு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தற்போது டி-10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அபுதாபி அணிக்கு துணை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, அபுதாபியின் தலைமை பயிற்சியாளர் பால் ஃபார்பிரேஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 7 அணிகள் பங்கேற்கும் டி-10 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்