“கெடக்குற சான்ஸை எல்லாம் வீணடிச்சிட்டு இருந்தா.. எப்படி இந்தியா டீம்ல இடம் கிடைக்கும்”.. RR ப்ளேயரை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மாமல்லபுரத்தில் மும்பை அழகியுடன் உல்லாசம்.. கடைசியில் வாலிபர்கள் செஞ்ச காரியம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

ஐபிஎல் தொடரில் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 40 லீக் போட்டியில் முடிவடைந்துள்ளன. இதில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் 6 வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மீது முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மோசமான ஷாட்களை அடித்து அவர் அவுட்டாகி வருகிறார். அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது சஞ்சு சாம்சன் இதுபோல் மோசமாக விளையாடி அவுட் ஆவது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான இயான் பிஷப், சஞ்சு சாம்சன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நான் சஞ்சு சாம்சனின் ரசிகன். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் தனது நல்ல பார்மை தவறான ஷாட் அடித்து வீணடித்து வருகிறார். ஜாஸ் பட்லர் ரன்கள் அடிக்காதபோது தன்னிடம் உள்ள நல்ல பார்ம் மூலம் அணியை மீட்டெடுக்க தவறிவிடுகிறார். அதனால்தான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப செல்லும் வாய்ப்பையும் கோட்டை விட்டு வருகிறார்’ என்று கூறினார்.

அதேபோல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி, சஞ்சு சாம்சன் குறித்து பேசியுள்ளார். அதில், ‘எப்போதுமே புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து ஷாட்களையும் அடிக்க அவர் முயற்சிக்கிறார். இதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் இதுபோல் விளையாடி அவர் அவுட்டாகி விடுகிறார்’ என டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

SANJU SAMSON, IAN BISHOP, WEST INDIES PLAYER IAN BISHOP, சஞ்சு சாம்சன், இயான் பிஷப், வெஸ்ட் இண்டீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்