'அவருக்கு' பதிலா நாங்க இருக்கோம்... களத்தில் 'குதித்த' இளம்வீரர்கள்... 'உலகக்கோப்பை' தோல்விக்கு பழிதீர்க்குமா கோலி படை?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணியை தோற்கடித்த கையோடு இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளது. அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் அணி விளையாடவிருக்கிறது. ஆஸ்திரேலிய போட்டியின்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளில் பிரித்வி ஷாவுக்கும், டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலிய போட்டியின்போது காயமடைந்த மற்றொரு இளம்வீரரான ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். மற்றொரு இளம்வீரரான சிவம் துபேவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இளம்வீரர்களுக்கு அதிகளவு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் பிசிசிஐ இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது. கடைசியாக கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின்போது நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அத்தோடு இந்திய அணியின் உலகக்கோப்பை கனவும் முடிவுக்கு வந்தது.
அதற்குப்பின் தற்போது நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுவதால் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் உலகக்கோப்பை தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்குமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
ஒருநாள் அணி விவரம்:-
1. விராட் கோலி(கேப்டன்) 2. ரோஹித் சர்மா(துணை கேப்டன்) 3. கே.எல்.ராகுல் 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5.மணீஷ் பாண்டே 6. சிவம் துபே 7. பிரித்வி ஷா 8. ரிஷப் பண்ட் 9. குல்தீப் யாதவ் 10. யஷ்வேந்திர சாஹல் 11. ரவீந்திர ஜடேஜா 12. ஜஸ்பிரிட் பும்ரா 13. நவ்தீப் சைனி 14.முஹம்மது ஷமி 15. ஷர்துல் தாகூர் 16. கேதார் ஜாதவ்.
டி20 அணி விவரம்:-
1. விராட் கோலி(கேப்டன்) 2. ரோஹித் சர்மா(துணை கேப்டன்) 3. கே.எல்.ராகுல் 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5.மணீஷ் பாண்டே 6. சிவம் துபே 7. சஞ்சு சாம்சன் 8. ரிஷப் பண்ட் 9. குல்தீப் யாதவ் 10. யஷ்வேந்திர சாஹல் 11. ரவீந்திர ஜடேஜா 12. ஜஸ்பிரிட் பும்ரா 13. நவ்தீப் சைனி 14.முஹம்மது ஷமி 15. ஷர்துல் தாகூர் 16. வாஷிங்டன் சுந்தர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஏன் தோனி, தோனின்னு இருக்கீங்க'... 'அவர் இடத்துக்கு ஒருத்தர் வந்தாச்சு'... கொளுத்தி போட்ட பிரபல வீரர்!
- இருக்குறதுலேயே 'கம்மி' சம்பளம்... இந்த டீம் 'கேப்டனுக்கு' தான்... எவ்வளவுன்னு தெரிஞ்சா கண்டிப்பா 'ஷாக்' ஆவீங்க!
- 2003ல் 'டிராவிட்'... 2020ல் 'கே.எல்.ராகுல்'... ஸ்டம்பிங்கில் தோனியின் வேகம்... இந்திய அணிக்கு கிடைத்த 'ஜாக்பாட்'
- இந்திய அணியின் 'முக்கிய' வீரர் திடீர் விலகல்... யாரை எடுக்குறது?... தலையை பிய்த்துக் கொள்ளும் தேர்வுக்குழு!
- தோனியின் கலக்கல் பைக் கலெக்க்ஷன்...ஷோ ரூம்களுக்கு சவால் விடும் பிரம்மாண்டம்... பைக் பிரியர்களின் தூக்கத்தை கெடுக்கும் புகைப்படங்கள்
- விராட்கோலி தான் பெஸ்ட்... இல்ல ஸ்டீவ்ஸ்மித் தான் பெஸ்ட்... தல...தளபதி ரேஞ்சுக்கு தெறிக்கவிடும் ட்விட்டர் பதிவுகள்
- மைதானத்துக்கு 'வெளிய' உக்கார வச்சா... எப்டி பெரிய 'பேட்ஸ்மேனா' ஆக முடியும்?... 'தெறிக்க' விட்ட முன்னாள் வீரர்!
- ரிக்கி பாண்டிங்கிற்கே பயிற்சியாளராகும் “இந்திய வீரர்!”... கொண்டாட்டத்தில் திளைக்கும் ரசிகர்கள்!
- 'இந்தியா' தொடரை வெல்கிறது... ஆனால் 'வேறொருவர்' தலைப்பு செய்தி ஆகிறார்... வெளிப்படையாக கிண்டலடித்த ஹிட்மேன்!
- ‘தோனி.. தோனி..’ கத்திய ரசிகர்கள்... திரும்பி முறைத்துப் பார்த்த கேப்டன்... உடனே மாறிய கோஷம்!