கோலி பயந்துட்டாரு...அதுனால தான் கேப்டன் பதவியை ராஜினாமா செஞ்சுருக்காரு! - ஆதாரங்களுடன் பேசிய சஞ்சய் மஞ்சரேகர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை: கோலி பயந்ததன் காரணமாகவே கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட்  அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி  விலகுவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்த முடிவால் விராத் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டி20,ஒரு நாள் போட்டி, IPL பெங்களூர் அணி கேப்டன் பதவியிலிருந்து ஏற்கனவே விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விராத் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "அணியை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு 7 வருடங்கள் கடின உழைப்பு மற்றும் இடைவிடாத விடாமுயற்சியுடன் செயல்பட்டேன். நான் முழு நேர்மையுடன் வேலையைச் செய்தேன், எதையும் சுலபமாக விட்டுவிடவில்லை.

ஒவ்வொரு விஷயமும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும், இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக பதவி விலகுகிறேன். பயணத்தில் பல ஏற்றங்கள் மற்றும் சில இறக்கங்கள் உள்ளன, ஆனால் முயற்சியின்மையோ அல்லது நம்பிக்கையின்மையோ இருந்ததில்லை. நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது 120 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன், என்னால் அதைச் செய்ய முடியாவிட்டால், அதைச் செய்வது சரியானதல்ல என்று எனக்குத் தெரியும். எனது இதயத்தில் எனக்கு முழுமையான தெளிவு உள்ளது, மேலும் எனது அணிக்கு நான் நேர்மையற்றவராக இருக்க முடியாது. 

கோலிக்கு முடிவெடுக்குற திறமை சுத்தமா கிடையாது..! அதுக்கு அந்த ஆஸ்திரேலியா மேட்ச் தான் உதாரணம்.. சுனில் கவாஸ்கர்

 

எனது நாட்டை இவ்வளவு நீண்ட காலத்திற்கு வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியதற்காக பிசிசிஐக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் முக்கியமாக அணிக்காக நான் கொண்டிருந்த பார்வையை எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் ஒத்துழைத்த அணி வீரர்களுக்கும், இந்த பயணத்தை மறக்கமுடியாததாகவும் அழகாகவும் மாற்றிய வீரர்களுக்கும், டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களை தொடர்ந்து மேல்நோக்கி நகர்த்திய இந்த வாகனத்தின் பின்னணியில் இருந்த ரவி சாஸ்திரி மற்றும் குழுவிற்கும், கடைசியாக, என்னை ஒரு கேப்டனாக நம்பி, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய திறமையான தனிநபராக என்னைக் கண்டறிந்த எம்எஸ் தோனிக்கும் நன்றி". எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் விராத் கோலியின் இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. குறிப்பாக சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்சரேகர் விராத் கோலி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.  அதில், "குறுகிய கால இடைவெளியில் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்து விட்டது. முதலில் ஐபிஎல் பெங்களூர் அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி, டி20, ஒருநாள் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார்.

"அய்யோ‌.. அத்தன காய்கறியும்‌ வீணாச்சே".. நடுரோட்டில் அடிவாங்கியபடி.. கதறி அழுத 'பெண்' வியாபாரி!

களம் மாறிய பின்பு அதாவது ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பொறுப்பில் வெளியேறிய பின் அசௌகரியமாக உணர்ந்துள்ளார். ஏற்கனவே கும்ப்ளே உடன் மோதல் ஏற்பட்டதும் நினைவு கூறத்தக்கது, ராகுல் டிராவிட் ரவி சாஸ்திரி போல கிடையாது. விராத்தின் பார்மும் மோசமாக உள்ளது. இதனால் ஏதாவது ஒருவகையில் தன்னை யாரும் நீக்கமுடியாத கேப்டனாக காட்டிக்கொள்ளவே கோலி விரும்பியுள்ளார். தன்னுடைய கேப்டன் பதவிக்கு ஆபத்து வரும் என பய உணர்வு வந்தவுடனே டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிவிட்டார்" என மஞ்சரேகர் கூறியுள்ளார்.

SANJAY MANJREKAR, VIRAT KOHLI, FORMER CRICKETER, சஞ்சய் மஞ்சரேகர், இந்திய கிரிக்கெட் அணி, விராட் கோலி, டி20

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்