அஸ்வின் திரும்ப டீம்க்கு வந்தது இப்டி தான்.. புது ரூட் எடுத்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.. என்னங்க இதெல்லாம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம் பிடித்தது பற்றி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு நாள் தொடரை, தென்னாப்பிரிக்க அணி, 3 - 0 கணக்கில், இந்திய அணியை வொயிட் வாஷ் செய்திருந்தது.

முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கூட, ஒரு போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், மூன்று ஒரு நாள் போட்டிகளில், ஒரு போட்டியில் கூட ஆதிக்கம் நிறைந்த ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தவில்லை.

கடும் விமர்சனம்

கடைசி போட்டியில் ஓரளவுக்கு வெற்றியை இந்திய அணி நெருங்கிய போதும், இறுதியில் சிறப்பாக பந்து வீசி, தென்னாப்பிரிக்க அணி எளிதில் வெற்றி பெற்றிருந்தது. கிரிக்கெட் அரங்கில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய அணி, இப்படி அதிகம் தடுமாறியது கடும் விமர்சனத்தை  சந்தித்திருந்தது. அதே போல, கேப்டனாக செயல்பட்ட கே எல் ராகுல் மீதும், இந்திய அணியின் ஆடும் லெவன், மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை என அனைத்தின் மீதும் அதிக  விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் அணியில் இடம்

இதில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20-உலக கோப்பைத் தொடரில், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அதே போல, ஒரு நாள் தொடரிலும், சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்திருந்தார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து

இதில், இரண்டு போட்டிகள் ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வின், குறைவான ரன்களே கொடுத்த நிலையில், ஒரு விக்கெட் மட்டும் தான் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அஸ்வின் மீண்டும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது பற்றி, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

விசித்திரமாக உள்ளது

'ஒரு நாள் போட்டியில், அஸ்வின் மீண்டும் எப்படி இடம் பிடித்தார் என்பது தான் தெரியவில்லை. அவர் ஒரு நாள் அணியில் இடம் பிடித்ததே விசித்திரமாக உள்ளது. அவரை மீண்டும் அணியில் இணைத்துக் கொண்டதற்கான விலை, இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க தொடர் மூலம் கிடைத்துள்ளது. இரண்டு போட்டிகளில் ஆடிய அஸ்வின், பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. சாஹல் பந்து வீச்சு கூட அப்படி தான். 50 ஓவர் போட்டிகளில், முகமது ஷமி சிறந்த தேர்வு என நான் நினைக்கிறேன்.

அவசியம்

வேகப்பந்து வீச்சில், புவனேஷ்வர் குமார், இந்த தொடருக்கு முன்பாக, தன்னுடைய சிறந்த ஃபார்முக்கு திரும்புவார் என்ற கேள்வியும் இருந்தது. ஆனால், ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில், அவரது இடத்திலும் வேறொரு பந்து வீச்சாளரைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. கடைசி போட்டியில் களமிறங்கிய தீபக் சாஹர் கூட, தன்னுடைய திறனை நிரூபித்துள்ளார்' என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில், அஸ்வினுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RAVICHANDRAN ASHWIN, SANJAY MANJREKAR, IND VS SA, BHUVNESHWAR KUMAR, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவிச்சந்திரன் அஸ்வின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்