"ஏதாச்சும் சொல்லி 'பல்பு' வாங்குறதே இவரோட வேலையா போச்சு..." கூலாக 'ட்வீட்' போட்ட 'ஜடேஜா'... சைக்கிள் கேப்பில் செஞ்சு விட்ட ரசிகர்கள்... 'பரபர' பின்னணி!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கும், தற்போது அணியிலுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம் தான்.

மஞ்ச்ரேக்கர் தான் ஜடேஜா குறித்து பேசும் போது, அவரை விட திறமையுள்ள வீரர்கள் இடம்பெறலாம் என்பது போல பேசுவார். இப்படி ஒரு முறை அவர் பேசியது பெரிய சர்ச்சையாகி இருந்தது. தன் மீது விமர்சனம் வைத்து கருத்து தெரிவிக்கும் மஞ்ச்ரேக்கருக்கு நேரடியாகவே ஜடேஜா பலமுறை பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. அப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர், 'எனக்கு ஜடேஜாவுடன் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ஜடேஜா போன்ற வீரர்கள் வெள்ளை பந்தில் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் அல்ல. அவரை போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் களமிறங்க கூடாது. அதே வேளையில் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா சிறந்த வீரர். நான் ஹர்திக் பாண்டியாவைக் கூட ஆடும் லெவனில் களமிறக்க வேண்டாம் என்று தான் சொல்லுவேன்' என குறிப்பிட்டிருந்தார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜா மற்றும் பாண்டியா குறித்து தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது. சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்து கிரிக்கெட் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட ரவீந்திர ஜடேஜா, 'அமைதியாக இருக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். சஞ்சய் மஞ்ச்ரேக்கரை குறிப்பிட்டு தான் அப்படி அவர் ட்வீட் செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர். 


 

 

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒரு நாள் தொடரில் வேண்டாம் என குறிப்பிட்ட ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தான் சிறப்பாக ஆடி இந்திய அணியை 300 ரன்கள் குவிக்க உதவி செய்தனர். இதன் காரணமாக, இந்திய அணி ஒரு நாள் தொடரில் ஆறுதல் வெற்றியையும் பெற்றது.
 







 

ஏற்கனவே சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், அவர் வேண்டாம் என்று சொன்ன வீரர்கள் ஒரு நாள் தொடரில் அணியின் வெற்றிக்கு உதவியுள்ளதால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பெயர் தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

















 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்