‘ஏன் அவரே கேப்டனா இருக்கக் கூடாது?’... 'பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு‘உலகக் கோப்பைக்கு பிறகு யாரைக் கேட்டு, விராட்கோலியை கேப்டன் பொறுப்பில் இருக்க செய்தீர்கள் என கவாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு, பதிலடி கொடுத்துள்ளார் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலி தொடர்ந்து கேப்டனாக இருப்பார் என தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்தார். இதையடுத்து விராட் கோலி கேப்டன் பொறுப்பு குறித்து தேர்வுக்குழு மீது கடுமையான கேள்விகளை எழுப்பினார் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். ‘கோலியை ஏன் கேப்டனாகவும் தேர்வு செய்தீர்கள். உலகக் கோப்பைத் தொடரோடு அவருக்கு கேப்டன் பதவி முடித்திருக்க வேண்டும் என்பது போல நேரடியாக கோலிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது கவாஸ்கரின் இந்தக் கருத்துகளுக்கு இந்தியாவின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன்படி அவர் ட்விட்டர் பக்கத்தில், கவாஸ்கர் அவர்கள் இந்திய தேர்வு குழுவினர் மற்றும் விராட் கோலி குறித்து கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்திய அணி உலகக்கோப்பையில் சிறப்பாகவே ஆடியது. 9 போட்டிகளில் 7 போட்டிகளில் நாம் வெற்றி பெற்றோம். மேலும் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றிக்கு அருகிலேயே சென்று நாம் தோற்றோம். இதனால் தேர்வு குழு முடிவுசெய்த கோலியின் கேப்டன்சி சரியான ஒன்றுதான் என்று மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அவர் மீண்டும் வலிமையுடன் ஃபார்முக்கு வருவார்..’ பிரபல வீரர் குறித்து விராட் கோலி நம்பிக்கை..
- 'எங்ககிட்ட நல்ல நட்பு இருக்கு'... 'அதனால அவரே வந்தா நல்லா இருக்கும்'... விராட் கோலி விருப்பம்!
- ‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ இறுதியாக விளக்கம் அளித்துள்ள விராட் கோலி..
- ‘சர்ச்சையை ஏற்படுத்திய விதிமுறை’... ‘இந்திய முன்னாள் வீரர் தலைமையில்’... ஐசிசி புதிய தகவல்!
- ‘யாரக் கேட்டு கேப்டனா இருக்காரு..?’ எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான்.. விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்..
- ‘திருமணம் ஏன் அவசியமா?'... 'சென்னையில் தோனியின் அசத்தல் பேச்சு'... வைரலான வீடியோ!
- இவங்க ரெண்டுபேரோட சண்டைக்கு இதுதான் காரணமா..? கசிந்த தகவல்..!
- ‘தோனியின் நாட்டுப்பற்றுக்கு’.. ‘சல்யூட்’ அடிக்க வைக்கும் காட்ரெலின் வைரல் ட்வீட்..
- ‘நல்லா ஆடினாலும், தொடர்ந்து வாய்ப்பு தரலனா’... 'அது நல்லது அல்ல'... 'இளம் வீரர் உருக்கம்'!
- ‘அவரால இரண்டு உலகக் கோப்பை போச்சு’... இப்டி மாத்துனா தான் சரியா வரும்’... 'முன்னாள் இந்திய வீரர் காட்டம்'!