"என்னுடைய இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டி".. கண்ணீருடன் வெளியேறிய சானியா மிர்ஸா.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா தன்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்திருக்கிறார். அதன்பிறகு தன்னுடைய டென்னிஸ் பயணம் குறித்து அவர் கண்ணீருடன் பேசிய வீடியோ ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா இணை, பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது. சானியாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி இது என்பதால் அவர் வெற்றிபெற வேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இப்போட்டியின் முதல் இரண்டு சுற்றிலும் இரு தரப்பும் தீயாக விளையாடியது என்றே சொல்ல வேண்டும். அப்படி பரபரப்புடன் நடந்த இரண்டு சுற்றிலும் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ்-ன் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இறுதியில் 6-7 (2), 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் லூயிசா ஸ்டெபானி - ரஃபேல் மாடோஸ் இணை கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
Images are subject to © copyright to their respective owners.
தன்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா கண்ணீருடன் ரசிகர்களுக்கு விடைகொடுத்தார். போட்டி முடிவடைந்த பிறகு பேசிய அவர்,"நான் அழுதால் இவை ஆனந்தக் கண்ணீர் மட்டுமே. இந்த வெற்றிக்கு தகுதியான மாடோஸ்-ஸ்டெபானிக்கு எனது வாழ்த்துகள். 2005 ஆம் ஆண்டு மெல்போர்னில் 18 வயதில் செரீனாவுடன் விளையாடியபோது எனது வாழ்க்கை தொடங்கியது. மீண்டும் மீண்டும் இங்கு வந்து இங்கு போட்டிகளை வென்று சில சிறந்த இறுதிப் போட்டிகளில் விளையாடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியை முடிக்க இதைவிட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்றார்.
ரோஹன் போபண்ணாவிற்கு நன்றி தெரிவித்து பேசிய சானியா,"ரோஹன் சொன்னது போல், எனக்கு 14 வயதாக இருந்தபோது, அவர்தான் எனது முதல் கலப்பு இரட்டையர் பார்ட்னர். நாங்கள் தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றோம். அது 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. மேலும் ரோஹன் சிறந்த பார்ட்னராகவும் நண்பராகவும் எனக்கு இருந்திருக்கிறார். என்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவருடன் இணைந்து விளையாடியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி ரோஹன்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
தொடர்ந்து தனது குடும்பத்தினர் பற்றி பேசிய சானியா,"எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள். என் மகன் முன்னிலையில் என்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் வெற்றிக்கு காரணமாக இருந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார். அப்போது, அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.
Also Read | 11,000 வருஷமா குகைக்குள் இருந்த அரிய பொக்கிஷம்..! ஆச்சரியத்தில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்.!!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இது என்னோட லாஸ்ட் ட்ரிப்".. அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த விமான பணிப்பெண்.. வைரல் வீடியோ..!
- ஓய்வு பெறுகிறார்களா சானியா மிர்சா- சோயப் மாலிக்..? கிரிக்கெட்- டென்னிஸ் தம்பதியரின் முடிவு என்ன?
- 4 மாதங்களில் '26 கிலோ' எடை குறைத்த 'சானியா மிர்சா'... வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்....
- ‘4 மாசத்துல 26 கிலோ’.. சானியா மிர்சாவின் பவர்புல் வொர்க்அவுட்..! வைரலாகும் வீடியோ..!
- 'நீங்க இப்படி ட்வீட் போடுறீங்க'...'உங்க கணவர் என்ன போட்டார் தெரியுமா'?...சாடிய நெட்டிசன்கள்!