'இந்தியா, பாகிஸ்தான் போட்டி விளம்பரங்கள்'... 'முதல்ல இரண்டுபேரும் நிறுத்துங்க'... விளாசிய டென்னிஸ் வீராங்கனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பற்றி, இருநாட்டு ஊடகங்களும் மிகவும் மலிவான விளம்பரங்களை வெளியிடுவது குறித்து சானியா மிர்சா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வரும் ஜூன் 16 -ம் தேதி மோதுகின்றன. இந்த இரு நாட்டு போட்டிகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஒரு உலகக் கோப்பையில் கூட  இந்தியாவை பாகிஸ்தான் வென்றது கிடையாது. இந்நிலையில், பாகிஸ்தானில் பிடிப்பட்ட விங் கமெண்டர் அபிநந்தனை கிண்டல் செய்து, அந்நாட்டை சார்ந்த ஜாஸ் டிவி விளம்பரத்தை வெளியிட்டது.

அந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்துக்கு இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றினர். இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பாகிஸ்தானில் ஜாஸ் டிவியும் மாறி, மாறி எதிரணிகளைத் தாக்குவது போல விளம்பரங்களை வெளியிடுகின்றன. இதனால் இரு நாட்டு ரசிகர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். கிரிக்கெட் ஆர்வலர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதனிடையே, இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோகிப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்ஷா ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘இரு நாட்டுத் தரப்பிலும் இருந்தும் சங்கடமான விளம்பரங்கள் வெளியாகின்றன. விளையாட்டை இது போல விளம்பரப்படுத்த தேவையில்லை. அதுவும் இவ்வளவு கேவலமாக… போதுமான அளவுக்கு கவன ஈர்ப்பு உள்ளது. இது வெறும் விளையாட்டுதான். ஒருவேளை நீங்கள் இதை விளையாட்டைவிட அதற்கு மேல் நினைத்தால்… வாழ்க்கையைத் தேடுங்கள்’ எனக் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்