'அவங்களுக்குள்ள' பேசிக்க கூட மாட்டாங்க, அப்புறம் எப்படி...? கோலி திடீர்னு இப்படி ஒரு 'முடிவ' எடுக்க 'காரணம்' என்னனா... - 'சீக்ரெட்' உடைத்த முன்னாள் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அதன் பிறகு கிரிக்கெட் அணியின் கேப்டனாக புது அவதாரம் எடுத்தவர் விராட் கோலி.

வெற்றிகர கேப்டனாக திகழும் விராட் கோலி பல சாதனைகளையும் செய்துள்ளார். ஆனால், ஒரு சில தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட முடியாத நிலையும் நிகழ்ந்துள்ளது.

அதோடு, கேப்டனாக செயல்படும் விராட், சில கிரிக்கெட் தொடர்களில் தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியாமல் சொதப்பியும் உள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் விராட் கோலி வரும் உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் டி-20 தொடர் கேப்டனாக செயல்பட விருப்பம் இல்லை என அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட செய்தி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தேர்வாளருமான சந்தீப் பட்டேல் கூறும் போது, 'தற்போது இந்திய அணியின் கேப்டனாக திகழ்ந்து வரும் விராட் கோலி மிக சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கேப்டன் விராட் கோலிக்கும், பிசிசிஐக்கும் ஒத்துப் போவதில்லை.

சொல்ல போனால் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை கூட இல்லை. இந்த நிகழ்வுகள் விராட் கோலியின் அதிரடி முடிவுக்கு முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த விஷயத்தில் நான் விராட் கோலியின் முடிவை வரவேற்கிறேன். ஏனென்றால் விராட் ஒரு மிக சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பேட்டிங்கில் சற்று பின்னடைவு ஏற்பட்டு இந்த 2021-ஆம் ஆண்டு வரை ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.

விராட் கோலி தன்னுடைய கேப்டன் பதவியிலிருந்து வெளிவந்து தன் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் அது பாராட்டுதலுக்கு உரிய விஷயம்' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்