"நடராஜன் மாதிரி ஒருத்தரால தான் அப்படி பண்ண முடியும்.." வேற லெவலில் பாராட்டிய முன்னாள் சிஎஸ்கே வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான ஒரு கட்டத்தை எட்டி உள்ளது.

Advertising
>
Advertising

பெரும்பாலான அணிகள், மூன்று போட்டிகள் வரை ஆடியுள்ள நிலையில், பல போட்டிகளின் முடிவுகள், எதிர்பாராத நேரத்தில் சில வீரர்களால் மாறிக் கொண்டே இருக்கிறது.

இதனால், போட்டியின் இறுதி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டு வருகிறது.

அதிரடி பேட் கம்மின்ஸ்

நேற்று நடைபெற்றிருந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி இருந்தன. இந்த போட்டியில் , இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில், பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரை சதமடித்து, அசாத்தியமான வெற்றியை அணிக்காக வென்று கொடுத்தார்.

அதுவும் மும்பை வீரர் டேனியல் சேம்ஸ் வீசிய ஒரே ஓவரில், 35 ரன்கள் போக ஒட்டுமொத்த கொல்கத்தா ரசிகர்களும் ஆர்ப்பரித்து கொண்டாடினர். பல வீரர்கள் தொடர்ந்து தங்களின் திறனை இந்த ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்து வருகின்றனர்.

'ஃபுல்' பார்மில் நடராஜன்

அந்த வகையில், தமிழக வீரரான நடராஜனும், முந்தைய ஐபிஎல் தொடர்களில் அறிமுகமாகி இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார். ஆனால், காயம் காரணமாக கடந்த ஓராண்டுகளாக ஆடாமல் இருந்து வந்த நடராஜன், தற்போது ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். இதுவரை ஹைதராபாத் அணி ஆடியுள்ள இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், மறுபக்கம் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தி உள்ளார் நடராஜன்.

நடராஜனால் முடியும்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முன்பு ஆடி வந்த ஆல் ரவுண்டர் சாம் குர்ரான், நடராஜனை பாராட்டி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "கடந்த ஆண்டு புனேவில் வைத்து நடந்த போட்டியில், நான் நடராஜனுக்கு எதிராக பேட்டிங் செய்தேன். 13 ரன்கள் அடிக்க வேண்டி இருந்த நிலையில், என்னை வைத்து ஓவரைக் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றார். அவரது யார்க்கர் பந்துகளை நான் சந்தித்துள்ளேன். தொடர்ந்து, ஆறு யார்க்கர் பந்துகளை வீசக் கூடிய பந்து வீச்சாளர் அவர்.

எல்லா டீம்க்கும் விருப்பம் இருக்கும்

பெரும்பாலான அணிகள், தங்களிடம் இருக்க வேண்டும் என விரும்பும் வீரர்களில் நடராஜனும் ஒருவர். அவர் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர். வித்தியாசமான ஆங்கிளில் வீசக் கூடிய அவரிடம் ரிவர்ஸ் ஸ்விங்கும் உள்ளது. க்ருனால் பாண்டியாவுக்கு அவர் வீசிய பந்து, லெக் ஸ்டம்பை பதம் பார்த்தது. அவர் ஒரு சிறந்த திறமைசாலி. மீண்டும் உடற்தகுதி பெற்று, தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" என சாம் குர்ரான் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், சாம் குர்ரான் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NATARAJAN, SAM CURRAN, CSK, IPL 2022, சாம் குர்ரான், நடராஜன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்