"தோக்குறமோ, ஜெயிக்கிறமோ மொதல்ல 'சண்ட' செய்யணும்.." ஒத்த ஆளா 'களத்துல' நின்னு போராடிய சுட்டிக் 'குழந்தை'... குவியும் பாராட்டுக்கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தொடக்கத்திலேயே தடுமாறியது. 100 ரன்களை கூட சென்னை அணி எட்டாது என நினைத்திருந்த நிலையில், அந்த அணியின் சாம் குர்ரான் இறுதிக் கட்டத்தில் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்ததால், சென்னை அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. சாம் குர்ரான் 47 பந்துகளில் 52 ரன்கள் அடித்திருந்தார். அவர் மட்டும் அடிக்கத் தவறியிருந்தால் சென்னை அணி மோசமான ஸ்கோரை தான் எடுத்திருக்கும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் அவரை குறித்து அதிகம் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். 













 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்