தனி ஆளாக 'ஆட்டம்' காட்டிய 'சுட்டி' குழந்தை... அடுத்ததா 'land' ஆயிருக்குற இடம் இது தான்.." வெளியான 'ஃபோட்டோ'.. கொண்டாடத்தில் 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக ஐபிஎல் (IPL) போட்டிகள் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக, அனைத்து ஐபிஎல் அணிகளும் கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் ஏற்கனவே பயிற்சியை ஆரம்பித்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டி நெருங்கி வருவதால், ஒவ்வொரு வீரர்களாக அணியில் இணைய ஆரம்பித்துள்ளனர். இதில், மிகப்பெரிய ஃசர்ப்ரைஸ் லிஸ்ட்டாக இரண்டு வீரர்கள் சென்னை அணியில் தற்போது இணைந்துள்ளது, ரசிகர்களை வேற லெவல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது. இந்த போட்டியில், இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 8 விக்கெட்டுகள் சென்ற பிறகு மைதானத்தில் நின்ற இங்கிலாந்து வீரர் சாம் குர்ரான், தனி ஆளாக இந்திய அணிக்கு ஆட்டம் காட்டினார்.

கடைசி வரை களத்தில் நின்ற சாம் குர்ரான், 95 ரன்கள் அடித்த போதும், அவரால் இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. இருந்தாலும், அவரது பேட்டிங்கை இந்திய ரசிகர்கள் அதிகம் பாராட்டினார். அதிலும் குறிப்பாக, சாம் குர்ரான், ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக ஆடவுள்ளதால், அவரது ஃபார்மைக் கண்டு சென்னை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒரு நாள் தொடர் முடிவடைடைந்து மறுநாளே, இங்கிலாந்து வீரர்களான சாம் குர்ரான் (Sam Curran) மற்றும் மொயின் அலி (Moeen Ali) ஆகியோர் சென்னை அணியுடன் இணைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படைத்தை சிஎஸ்கே, தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், சென்னை ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.

 

அது மட்டுமில்லாமல், இந்த போட்டோவும் தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்துடன் சென்னை அணி வெளியேறியிருந்தது.


இதனால், இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சிஎஸ்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்