"'ஐபிஎல்' ஏலத்துல யாரும் எடுக்கல'னு.. சோகத்துல இருந்தவர் கிட்ட... 'வெந்த புண்ணுல வேல பாய்ச்சுர' மாதிரி... அவரோட காதலி கேட்டாங்க பாருங்க ஒரு 'கேள்வி'... செம 'வைரல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலம் தற்போது சென்னையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு இந்த முறை கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ள நிலையில், மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியுள்ளது. அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயீன் அலியை 7 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்த ஏலத்தில் பல வீரர்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிலான தொகைக்கு வாங்கப்பட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் என்பவரை 14 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இப்படி அதிகம் எதிர்பார்க்காத தொகை கொடுத்து சில வீரர்களை வாங்கி வரும் நிலையில், எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்களை வாங்க எந்த அணியும் முன் வரவில்லை. ஆஸ்திரேலிய வீரர் பின்ச், இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் ஆகியோரை எந்த அணியும் இதுவரை தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில், தான் விலை போகாதது குறித்து, சாம் பில்லிங்ஸ், ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது காதலி, 'நீங்கள் ஏன் ஒரு பந்து வீச்சாளராக ஆகவில்லை' என சாம் பில்லிங்கிஸிடம் கேட்பதாக, நக்கலுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆல் ரவுண்டர்கள் மற்றும் பவுலர்களே இந்த முறை அதிகம் விலைப் போவதால், ஒரு பேட்ஸ்மேனாக தன்னை எந்த அணியும் எடுக்காததைத் தான் சாம் பில்லிங்ஸ் அப்படி தெரிவித்துள்ளார். சாம் பில்லிங்ஸ், இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்