'30 வயசு ஆச்சு தம்பி...' 'கொஞ்சம் சீக்கிரமா பார்முக்கு வாங்க...' - 'இந்திய வீரர்' குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி டி-20 உலககோப்பையில் இந்தியா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் தற்போது, இந்தியாவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கலக்கி வருகிறது.

Advertising
>
Advertising

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த வாரத்தில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் இப்போதும் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் சறுக்கி வருகிறது.

ரோஹித் ஷர்மா முழுநேர கேப்டன் ஆன பின்பு அவரது ஆட்டம் சிறப்பாக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு எழுகிறது. அதோடு, இந்த தொடரில் முதல் போட்டியின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அடுத்த இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவரோடு சேர்ந்து ரிஷப் பண்ட்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வீரரான சல்மான் பட் சூர்யகுமார் யாதவ் குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதில், 'சூர்யகுமார் யாதவ் ஒரு கிரிக்கெட் பயணத்தில் ஒரு முதிர்ச்சியான பிளேயர். அவர் நிறைய டொமஸ்டிக் கிரிக்கெட் விளையாடி உள்ளார். தற்போது 30 வயதுக்கு மேல் ஆகும் அவர் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

அவரை இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது அனுபவத்துடன் ஒப்பிடுவது மிகவும் தவறு. சூர்யகுமாரை ஒப்பிடும் போது இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் குறைந்த அனுபவம் கொண்டவர்கள்.

சூர்யகுமார் யாதவ் நிச்சயம் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். 

ஆனால் துரதிதஷ்ட வசமாக உலக கோப்பை தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருந்ததால் சீக்கிரம் அவர் பார்மிற்கு திரும்ப வேண்டும் என்பது என் விருப்பம்' என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

SALMAN BUTT, SURYAKUMAR YADAV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்