"பக்காவான பிளான்.. வெறித்தனமான கேப்டன்ஷிப்" - ரோஹித் ஷர்மாவை புகழ்ந்த பாகிஸ்தான் பிளேயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 T20 போட்டிகளிலும் இரு அணிகளும் விளையாட இருக்கின்றன. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனையடுத்து கப் யாருக்கு? என்பதை முடிவு செய்யும் போட்டியான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியிலும் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
40 சாட்டிலைட்டும் காலி.. விண்வெளியில் நடந்த சம்பவம்.. 750 கோடி நஷ்டத்தில் எலான் மஸ்க்..!
இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் புதிய கேப்டனான ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி இந்திய அணிக்கு கைகொடுத்தது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும் கே.எல்.ராகுல் 49 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு இந்தியா வெற்றியை எட்டுமா? என ரசிகர்கள் கவலையில் இருந்தபோது, இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ரசிகர்களுக்கு தங்களது பந்து வீச்சின் மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தனர். குறிப்பாக ரோஹித் ஷர்மாவின் அடுத்தடுத்த மூவ்கள் வெற்றிபெற்றன. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஷமார் புரூக்ஸ் 44 ரன்னும், அகேல் ஹொசைன் 34 ரன்னும், ஷாய் ஹோப் 27 ரன்னும், ஒடியன் ஸ்மித் 24 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணியை பொறுத்தவரையில் 9 ஓவர்களை வீசிய பிரசித் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளையும் சிராஜ், சஹால், சுந்தர் மற்றும் ஹூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் .
வெறித்தனமான கேப்டன்சி
இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட். இது குறித்து அவர்," ரோஹித் ஸ்மார்ட்டாக கேப்டன்சி பொறுப்பை கையாண்டார். பீல்ட் செட்டிங்கில் அவர் வெறித்தனமாக செயல்பட்டார். கேட்ச்களை கவனிக்கும் போது எத்தனை துல்லியமாக அவர் பீல்டர்களை நிறுத்தியிருக்கிறார் என்பது விளங்கும். அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினர். கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் சிறந்த போட்டி இது" என்றார்.
இந்தியா பேட்டிங்
இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சற்று முன் வரையில் இந்திய அணி 30 ஓவர் முடிவில் 152 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் போட்ட தூண்டில்.. மேட்ச்'ல நடந்த சுவாரஸ்யம்.. "இப்படி பண்றதுக்கு செம துணிச்சல் வேணும்"
- எல்லாரும் கேட்ட ஒரே கேள்வி.. ஏன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக விளையாடுனார்..? கேப்டன் ரோகித் விளக்கம்..!
- "ஏன், உன்னால முடியாதா?.." ஷர்துல் செயலால் கடுப்பான ரோஹித்.. "ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன் போல"
- இந்தியாவுல இப்படி ஒரு பவுலிங்கா..பிரசித் கிருஷ்ணாவை பாராட்டிய ஹிட்மேன் ரோஹித்..!
- "உனக்கு என்ன ஆச்சு??.." திடீரென கத்திய ரோஹித் ஷர்மா.. மைக்கில் பதிவான 'ஆடியோ'.. போட்டிக்கு நடுவே நடந்தது என்ன?
- IND vs WI : களம் ஒன்றில் ரிஷப் பாண்ட்.. ரோகித் ஷர்மா போட்ட மாஸ்டர் பிளான்! 'இது லிஸ்ட்லயே இல்லையே'!
- ஒருநாள் போட்டியில் முதல் இந்திய பேட்ஸ்மேன்.. ரோஹித் செய்ய இருக்கும் சம்பவம் என்னன்னு தெரியுமா?
- இப்டி பேசுறவங்கள என்ன தான் பண்றது??.. கோலி - ரோஹித் விவகாரம்.. கடுப்பான சுனில் கவாஸ்கர்
- மறுபடியும் RCB கேப்டன் ஆகிறாரா கோலி..? முன்னாள் வீரர் ‘சூசகமாக’ சொன்ன பதில்..!
- கட்டம் கட்டித் தூக்கிய ரோஹித் ஷர்மா.. கூடவே கோலியும் போட்ட 'ஸ்கெட்ச்' பக்கா.. குழம்பி நின்ற பேட்ஸ்மேன்