'ஹர்திக் பாண்டியா' ரொம்ப வீக்.. "அவரு இனிமே அவ்ளோ தான் போல?.." முன்னாள் வீரர் கருத்தால் 'அதிருப்தி'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் அதிரடி ஆல் ரவுண்டராக தனது ஆரம்ப காலத்தில் வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான ஹர்திக் பாண்டியா, பட்டாசைப் போல அதிரடியாக வெடித்ததன் மூலம், இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பேட்டிங் மட்டுமில்லாமல், பந்து வீச்சிலும் கலக்கிய ஹர்திக் பாண்டியா, சிறந்தவொரு ஆல் ரவுண்டராக இந்திய அணிக்கு விளங்கி வந்தார்.
ஆனால், எல்லாமே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாறி, ஹர்திக் பாண்டியாவிற்கு சோதனை காலமாக மாறி விட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் பிறகு, சில காலம் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா, சமீப காலமாக தான் மீண்டும் ஆடி வருகிறார்.
ஆனால், பேட்டிங் மட்டுமே செய்யும் இவர், பந்து வீசுவதில்லை. ஐபிஎல் தொடரிலும் பந்து வீசாத இவர், சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலக கோப்பையிலும் மொத்தமாக 4 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார். ஆல் ரவுண்டரான வீரர் ஒருவர் தொடர்ந்து பந்து வீசாமல் பேட்டிங் மட்டுமே செய்து வருவது, கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் கூட, பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
அதிகரிக்கும் விமர்சனம்
கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இன்னும் அவர் முழு உடற்தகுதியை நிரூபிக்காத காரணத்தினால், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் போன்று ஒரு ஆல் ரவுண்டராக வருவார் என ஹர்திக்கின் ஆரம்ப காலத்தில் அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், அவரது ஆட்டத்திறன் தலை கீழாக ஆகியுள்ளது. அது மட்டுமில்லாமல், பலருக்கு இவர் மீதான நம்பிக்கையும் போய் விட்டது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தற்போதைய இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே அனைத்து விதமான போட்டிகளிலும் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். ஹர்திக் பாண்டியாவின் இடம் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், இதிலிருந்து மீண்டு, பழைய ஃபார்முக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால், அதே வேளையில், பல முன்னாள் வீரர்கள், ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மை விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
மிக கடினம்
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட், ஹர்திக் பாண்டியாவை விமர்சனம் செய்து கருத்து வெளியிட்டுள்ளார். 'ஹர்திக் பாண்டியாவின் உடல், மிகவும் பலவீனமாக உள்ளது. இதனால், ஏதாவது ஒரு வடிவிலான போட்டியில் கூட, நிலை நிறுத்திக் கொள்வது என்பது மிகவும் கடினம். சிறந்த டயட் முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி, உடம்பை அவர் வலுப்பெறச் செய்ய வேண்டும். ரவி சாஸ்திரி கூட சமீபத்தில், கிரிக்கெட்டை விட்டு ஹர்திக் விலகி, கடினமாக உழைத்தால் மட்டுமே அவரால் 4 ஓவர்கள் சரியாக பந்து வீச முடியும் என கூறியிருந்தார். அப்படி என்றால், அவரால் தற்போது 4 ஓவர்கள் கூட பந்து வீச முடியாத நிலையில் தான் இருக்கிறார் என்பது தெரிகிறது' என சல்மான் பட் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம், தக்க வைத்துக் கொள்ளாமல், கழற்றி விட்டது. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில், அகமதாபாத் அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அஸ்வின் பேச்சால் ரவிசாஸ்திரி கொதிப்பு..."பூசி மெழுகி பேசுற ஆள் நான் இல்லை"..!
- அதிகரிக்கும் ஒமைக்ரான்.. ஐபிஎல் 2022 எங்கு நடக்கும்??.. பிளான் பி ரெடி.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
- ரவிசாஸ்திரி பேசிய ஒற்றை வார்த்தை.. நொறுங்கிப் போன அஸ்வின்.. வெளிவந்த உண்மை..
- 'ஐபிஎல் 2022' மெகா ஏலம் எப்போது நடைபெறும்?.. வெளியான 'லேட்டஸ்ட்' தகவல்..
- 'சிஎஸ்கே'க்கு அடுத்த ருத்துராஜ் ரெடி?!.. "அந்த தங்கத்த சீக்கிரம் தூக்கிட்டு வாங்கப்பா.." இனி இருக்கு 'சரவெடி'!!
- "அடிபொளி சாரே!!".. அடுத்த சீசனுக்கும் மாஸான 'பிளான்' ரெடி!.. 'சிஎஸ்கே' வைத்த குறி?!.. எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'!!
- ‘எனக்கு எதிரா சதி நடந்தது..!’- புது சர்ச்சையைக் கிளப்பும் ரவி சாஸ்திரி
- கோலி இடத்துக்கு அடுத்து வரப்போறது யாரு..? RCB போடும் கணக்கு என்ன..?- முன்னாள் வீரரின் ‘ஒபினியன்’..!
- '30 வயசு ஆச்சு தம்பி...' 'கொஞ்சம் சீக்கிரமா பார்முக்கு வாங்க...' - 'இந்திய வீரர்' குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்...!
- “என்னை எல்லாம் ‘இந்த’ ஐபிஎல் டீம்-ல எடுக்கமாட்டங்க..!” என்ன சொல்றீங்க அஸ்வின்..? அப்போ ‘அந்த’ டீம்-ல வாய்ப்பு இருக்கா?