VIDEO: ‘இவங்க இவ்ளோ எமோஷனலாகி யாரும் பார்த்ததில்ல’.. மகளை கட்டியணைத்து கண்கலங்கிய சாக்‌ஷி தோனி..! அதுக்கு காரணம் இதுதான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி பெற்றததும் தோனியின் மனைவி கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான ப்ளே ஆஃப் (PlayOffs) போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 51 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணியைப் பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, பிராவோ மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தனர் சிஎஸ்கே அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இதில் டு பிளசிஸ், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பாவுடன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதில் ராபின் உத்தப்பா 63 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. அப்போது பேட்டிங் செய்த கேப்டன் தோனி ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் சென்னை அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், தோனி (Dhoni) வின்னிங் பவுண்டரில் அடித்ததும் மகிழ்ச்சியில் அவரது மனைவி சாக்‌ஷி (Sakshi), தனது குழந்தையை கட்டியணைத்து கண்கலங்கினார். நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் தோனி சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்த சூழலில் நேற்றைய போட்டியில், அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது களமிறங்கிய தோனி, அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தார். இதனால்தான் சாக்‌ஷி தோனி உணர்ச்சி வசப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்