"தோனி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?".. "கிரிக்கெட் நடக்கலாம் ஆனால்"... ஷாக்ஷி தோனி பரபரப்பு கருத்து!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி இந்த வருடம் கிரிக்கெட் விளையாடப்போவதில்லை எனவும் நாங்கள் இனி வரும் நாட்களை எங்களுக்காகத் திட்டமிட்டிருக்கிறோம் எனவும் தோனியின் மனைவி சாக்ஷி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய ஷாக்ஷி தோனி, அவரது கணவரும் கிரிக்கெட் வீரருமான தோனி குறித்தும் அவரின் ஊரடங்கு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் பேசும் போது, "தோனி குறித்த விஷயங்கள் எங்கிருந்துதான் வருகிறது எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் மீது ஊடக வெளிச்சம் இருக்கும் போது நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் அவர்களது கருத்துகளை முன் வைப்பார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தோனியின் ஓய்வு குறித்த வதந்திகள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன. எது நடந்தாலும் சரி எனக்கு என் தொலைபேசிக்கு அழைப்பும் மற்றும் குறுஞ்செய்தியும் வந்த வண்ணம் உள்ளன" என்றார்.
மேலும் சிஎஸ்கே குறித்துப் பேசிய சாக் ஷி தோனி, 'நாங்கள் சிஎஸ்கேவை மிகவும் மிஸ் செய்கிறோம். ஐபிஎல் போட்டிகள் நடக்குமா அல்லது நடக்காதா எனத் தெரியவில்லை. எனது மகளும் சிஎஸ்கே குறித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். எனினும், என்ன நடந்தாலும் இந்த வருடம் கிரிக்கெட் இல்லை. காரணம் நாங்கள் முன்னதாகவே வரும் நாட்களை எங்கே செலவு செய்யப் போகிறோம் என்பது குறித்துத் திட்டமிட்டு விட்டோம்.
கிரிக்கெட் இருந்தால் இருக்கும். ஆனால் தோனி வரும் நாட்களை மலையேற்றத்திற்குத் திட்டமிட்டு இருக்கிறார். நாங்கள் உத்தரகாண்ட் செல்ல இருக்கிறோம். அங்குள்ள ஒரு சிறிய கிராமத்தில் தங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். இது மட்டுமன்றி சாலை பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த ஊரடங்கு நாட்களில் தோனியின் மன அழுத்தத்தை வீடியோ கேம்கள்தான் பெருமளவு குறைத்தன. குறிப்பாக பப்ஜி. எங்களது படுக்கைகளை பப்ஜிதான் ஆக்கிரமித்துள்ளது.
தோனிக்கு இருசக்கர வாகனங்கள் மீது இருக்கும் ஈர்ப்பு பற்றிக் கேட்ட போது, "தோனி இருசக்கர வாகன உபகரணங்களை வாங்கி அவரே அதை வடிவமைக்கிறார். அப்போது ஏதாவது ஒரு பகுதியைப் பொருத்த மறந்து விட்டால், அடுத்த நாள் மொத்த உபகரணங்களையும் கழற்றிவிட்டு மீண்டும் அதனை வடிவமைப்பார்" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சீக்கிரமே 'அப்பாவாக' போறேன்... புகைப்படம் வெளியிட்ட 'இளம்வீரர்'... போட்டிபோட்டு வாழ்த்தும் பிரபலங்கள்!
- கடைசி ‘ரெண்டு’ நிமிஷத்துலதான் தோனி அத பண்ணுவார்.. ‘2019 பைனல் மேட்ச்லையும் அப்டிதான் செஞ்சிருப்பாரு’.. முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன ‘சீக்ரெட்’!
- 'அது வெறும் வதந்திதான் சாமி!'.. “லாக்டவுன்ல வீட்லயே இருக்காங்கல்ல.. புரியது!”.. சாக்ஷி தோனி அனல் பறக்கும் ட்வீட்!
- அந்த 'மேட்ச்'ல நாங்க ஜெயிக்க... 'தோனி' பண்ண சின்ன விஷயம் தான் காரணம்... 'ரகசியம்' உடைக்கும் 'உத்தப்பா'!
- ‘ஏலியன்ஸ் வராங்களா?’.. "பெங்களூர் பூம்ம்ம்ம் சத்தத்துக்கும் இவங்களுக்கும் என்ன சம்மந்தம்?".. ட்ரெண்ட் ஆகும் ட்விட்டர்வாசிகளின் கற்பனைகள்!
- அன்னைக்கு ‘தோனி’ சொன்ன அட்வைஸை நான் கேட்கல.. முதல் ‘இரட்டை சதம்’ அடித்த சம்பவத்தின் ‘சீக்ரெட்’ சொன்ன ரோஹித்..!
- "வார்னே என்னை முட்டாளாக்கினார்!".. "அணிக்கு தேர்வு செய்ய லஞ்சம் கேட்டப்போ என் தந்தை சொன்னது இதான்!".. "உடைந்து அழுதேன்!".. கோலி!
- "கழுத்த அறுக்கப் போறேனு சொன்னாரு!"... "6 பந்தில் 6 சிக்ஸர் அடிச்சப்ப கோவமா இருந்தேன்!".. மனம் திறந்த யுவராஜ் சிங்!
- "டிராவிட்டை தப்பா பேசினேனா?".. "சிஎஸ்கேவுக்கு எதிரா ஆடணும்னு நெனைச்சேன்!".. மனம் திறந்த கிரிக்கெட் வீரர்!
- ஆத்தாடி 'இம்புட்டு' கோடி நட்டமா?... ஆனாலும் 'எஸ்' சொல்ல மாட்டோம்... 'பிரபல' அணி அறிவிப்பு!